நெசமாலுமா... மஹிந்திரா செஞ்சூரோவுக்கு 30,000 பேர் முன்பதிவு!!

By Saravana

ஸ்டாலியோவால் ஏற்பட்ட அவப்பெயரை மஹிந்திரா செஞ்சூரோ மூலம் துடைத்துள்ளது. ஆம், விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு 6 வாரங்களில் இதுவரை 30,000 பேர் செஞ்சூரோவுக்கு முன்பதிவு செய்துள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.

காரில் இருப்பது போன்ற பல்வேறு வசதிகள், சிறப்பான மைலேஜ் மற்றும் குறைந்த விலை ஆகிய அனைத்தும் செஞ்சூரோவுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்துள்ளன. செஞ்சூரோவின் வெற்றிக்கான காரணங்களாக குறிப்பிடப்படும் வசதிகளின் விபரம் ஸ்லைடரில் காணலாம்.

 எஞ்சின்

எஞ்சின்

110சிசி ரகத்தில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் செஞ்சூரோவில் 8.5 எச்பி சக்தியையும், 8.5 என்எம் டார்க்கையும் வழங்கும் 106.7சிசி கொண்ட எம்சிஐ-5 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

தேட வேண்டாம்

தேட வேண்டாம்

சில சமயம் பார்க்கிங் பகுதிகளில் வண்டியை தேட வேண்டியிருக்கும். அப்போது, வண்டி எங்கு நிற்கிறது என்பதை எளிதாக கண்டுபிடிக்கும் வசதி கொண்ட Find me Lamps கொடுக்கப்பட்டுள்ளது. செஞ்சூரோவின் டாப் வேரியண்ட்டில் இந்த வசதி கிடைக்கும்.

கைவிடாத செஞ்சூரோ

கைவிடாத செஞ்சூரோ

இரவில் வண்டியை நிறுத்தியவுடன் சிறிது நேரம் ஒளி தரும் Guide me Home lamps இருக்கிறது.

டிஜிட்டல் மயம்

டிஜிட்டல் மயம்

அனலாக் டாக்கோமீட்டருடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ரிமோட் சாவி

ரிமோட் சாவி

கார்களில் இருப்து போன்று ரிமோட் சாவி வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், சிறிய டார்ச் லைட்டும் உள்ளது.

அலார்ம்

அலார்ம்

திருட்டு போவதை தடுக்கும் வகையிலான எச்சரிக்கை அலார்ம் மற்றும் எஞ்சின் இம்மொபைலைசர் வசதியும் இருக்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

இந்த பைக் லிட்டருக்கு 85.4 கிமீ மைலேஜ் செல்லும் என அராய் சான்றளித்துள்ளது. எப்படியிருந்தாலும் நடைமுறையில் 70 கிமீ வரையிலாவது மைலேஜ் தரும் என்பது முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

பெட்ரோல் டேங்க்

பெட்ரோல் டேங்க்

இந்த பைக்கில் 12.7 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கிறது. எனவே, அடிக்கடி பெட்ரோல் நிலையத்தில் கியூ கட்டி நிற்க வேண்டியிருக்காது.

 கிரவுண்ட் கிளியரன்ஸ்

கிரவுண்ட் கிளியரன்ஸ்

சாலை நிலைகளுக்கு ஏற்ற விதத்தில் 173 மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்டது.

கிரவுன்ட் கிளியரன்ஸ்

கிரவுன்ட் கிளியரன்ஸ்

சாலை நிலைகளுக்கு ஏற்ற விதத்தில் 173 மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்டது.

எல்இடி டெயில் லைட்

எல்இடி டெயில் லைட்

எல்இடி டெயில் லைட் பைலட் லைட் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதுவும் பிரிமியம் பைக் அந்தஸ்தை மஹிந்திரா செஞ்சூரோவுக்கு வழங்கியுள்ளது.

 எலக்ட்ரிக் ஸ்டார்ட்

எலக்ட்ரிக் ஸ்டார்ட்

எலக்ட்ரிக் ஸ்டார்ட் மற்றும் கிக் ஸ்டார்ட் மாடல்களில் கிடைக்கும். பட்ஜெட் மற்றும் வசதிக்கு தக்கவாறு தேர்வு செய்து கொள்ளலாம்.

ஒரே குறை

ஒரே குறை

இப்போதைக்கு செஞ்சூரோவில் டிஸ்க் பிரேக் இல்லை என்பதை குறையாக சொல்லலாம். விலையை சற்று கூட்டியாவது டிஸ்க் பிரேக் பொருத்தினால் வாடிக்கையாளர்களின் மனதில் கூடுதல் இடம்பிடிக்கலாம்.

பேட்டரி

பேட்டரி

பராமரிப்பு அவசியமற்ற பேட்டரி இருப்பதால் கவலையில்லை

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு அதிகபட்சம் 92 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக குறிக்கப்பட்டுள்ளது.

 வண்ணங்கள்

வண்ணங்கள்

வண்ணங்கள் சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கும்.

வேரியண்ட்கள்

வேரியண்ட்கள்

மொத்தம் 4 வேரியண்ட்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. தற்போது டாப் வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.

 வாரண்டி

வாரண்டி

இந்த பைக்குக்கு 5 வாரண்டியும் வழங்கப்படுகிறது. இதுதான் இந்த பைக் மீது அதிக நம்பிக்கை கொடுக்க காரணமாகியிருக்கிறது.

விலை

விலை

ரூ.45,000 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். கொடுக்கும் பணத்திற்கும் மீறிய மதிப்புடன் இந்த பைக்கை மஹிந்திரா களமிறக்கி இருக்கிறது.

Most Read Articles
English summary
Mahindra Two Wheelers, a part of the USD 16.2 billion Mahindra Group, today announced that it has received an overwhelming 30,000 plus bookings for its Mahindra Centuro motorcycle within just 6 weeks of the bike’s launch. The company is ramping up production capacity at its Pithampur plant to meet this growing demand.
Story first published: Tuesday, August 27, 2013, 13:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X