மஹிந்திரா செஞ்சூரோ பைக்கின் புதுமையான வசதிகளுக்கு சர்வதேச காப்புரிமை!

By Saravana

நம் நாட்டு இருசக்கர வாகன மார்க்கெட்டில் மஹிந்திரா இருசக்கர வாகன நிறுவனம் படு வேகமாக முன்னேறி வருகிறது. பல புதுமையான வசதிகளுடன் களமிறக்கப்பட்ட மஹிந்திரா செஞ்சூரோவின் அசுர வேகமான விற்பனைதான் இந்த வேகத்துக்கு காரணம்.

இந்த நிலையில், செஞ்சூரோவில் அறிமுகம் செய்யப்பட்ட புதுமையான தொழில்நுட்பங்களில் 4 தொழில்நுட்பங்களுக்கு சர்வதேச காப்புரிமை கிடைத்துள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.

புதுமை வசதிகள்

புதுமை வசதிகள்

கார்களில் இருப்பது போன்ற திருட்டை தவிர்க்கும் எஞ்சின் இம்மொபைலசர், திருட்டு எச்சரிக்கை அலாரம், டார்ச் லைட் கொண்ட ரிமோட் சாவி, கூட்டத்தில் நிறுத்தப்பட்டிருக்கும்போது வண்டியை எளிதாக கண்டுபிடிப்பதற்கான ஒளிரும் விளக்குகள் உள்ளிட்ட தொழில்நுட்பங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

டிஜிட்டல் டேஷ்போர்டு

டிஜிட்டல் டேஷ்போர்டு

முந்தைய வசதிகள் தவிர்த்து டிஜிட்டல் திரை கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் செல்லலாம் என்பதை தெரிவிக்கும் இண்டிகேட்டர், சர்வீஸ் நினைவூட்டும் வசதி, எரிபொருள் சிக்கனத்தை தெரிவிக்கும் எக்கானமி மோடு இண்டிகேட்டர் உள்ளிட்ட வசதிகளும் இருசக்கர வாகன மார்க்கெட்டில் புதிய வசதிகளாக செஞ்சூரோவில் முதன்முறையாக வந்தன.

 காப்புரிமை

காப்புரிமை

செஞ்சூரோவில் அறிமுகம் செய்யப்பட்ட தொழில்நுட்பங்களில் ஃப்யூவல் கேஜ் சிஸ்டம், ஸ்டார்ட் ஸ்டார்ப் சிஸ்டம் போன்று குறிப்பிட்ட நேரத்திற்கு நிற்கும்போது எஞ்சினை அணைத்துவிடும் ஆட்டோமேட்டிக் இக்னிஷன் கட் ஆஃப் சிஸ்டம், இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் செல்லலாம் என்பதை தெரிவிக்கும் டிஸ்டன்ஸ் டு எம்டி ஃப்யூவல் சிஸ்டம் மற்றும் எஞ்சின் இம்மொபைலைசர் உள்ளிட்ட 4 தொழில்நுட்பங்களுக்கு சர்வதேச காப்புரிமை கிடைத்துள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.

தேவையான வசதிகள்

தேவையான வசதிகள்

வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து நாங்கள் அளிக்கும் புதிய தொழில்நுட்பங்கள் நிச்சயம் போட்டியாளர்களிடமிருந்து எங்களது தயாரிப்புகளை வேறுப்படுத்தும் என்று மஹிந்திரா இருசக்கர வாகனப் பிரிவின் உயரதிகாரி விரென் போப்லி தெரிவித்துள்ளார்.

 அடுத்தடுத்து புதுமைகள்

அடுத்தடுத்து புதுமைகள்

செஞ்சூரோ தவிர்த்து அனைத்து இருசக்கர வாகன மாடல்களிலும் புதுமையான தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யும் பணிகள் தொடரும். புனேயில் உள்ள எங்களது ஆராய்ச்சி மையத்திலிருந்து இருசக்கர வாகனங்களுக்கு மேலும் பல புதிய தொழில்நுட்ப வசதிகளை உருவாக்கும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளோம். இது சர்வதேச அளவில் எங்களை முன்னிறுத்த உதவும் என்று மஹிந்திராவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் மூத்தத் துணைத் தலைவர் அசோக் தெரிவித்தார்.

 காத்திருப்பு காலம்

காத்திருப்பு காலம்

ரூ.52,000 விலையில் கிடைக்கும் மஹிந்திரா செஞ்சூரோவுக்கு இப்போது காத்திருப்பு காலம் எவ்வளவு தெரியுமா? ஜஸ்ட் 4 மாதங்கள். காத்திருப்பு காலத்தை குறைப்பதற்காக உற்பத்தியை கூட்டுவதற்கும் மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
Mahindra Two Wheelers, the emerging player in India's flourishing two wheeler market has been putting up a strong show with its new Centuro 110cc segment commuter motorcycle. The Centuro alone resulted in triple digit growth figures for the company in the past few months. The reason being a featured packed offering.
Story first published: Tuesday, December 10, 2013, 12:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X