போலரிஸுடன் ராயல் என்பீல்டு கூட்டணி?

Victory Motorcycle
அமெரிக்காவை சேர்ந்த போலரிஸ் வாகன தயாரிப்பு நிறுவனத்துடன் இந்தியாவை சேர்ந்த ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனம் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் போலரிஸ் நிறுவனம் ஆஃப்ரோடு வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், தனது அங்கமாக செயல்படும் இந்தியன் மற்றும் விக்டரி மோட்டார்சைக்கிள்களை இந்திய மார்க்கெட்டில் களமிறக்கிவிட முனைப்புடன் இருக்கிறது.

ஆனால், இந்தியாவில் போதிய டீலர் நெட்வொர்க் மற்றும் இறக்குமதி வரி ஆகியவை தடை கற்களாக இருக்கின்றன. இதற்காக, ஐஷருடன் கைகோர்க்க உள்ளது. ஐஷரின் அங்கமான ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு ஜெய்ப்பூரில் ஆலை இருக்கிறது. அந்த ஆலை செயல்படாத நிலையில் இருக்கிறது.

அந்த ஆலையில், தனது மோட்டார்சைக்கிள்களை அசெம்பிள் செய்து கொள்ளும் விதமாக கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. மேலும், ராயல் என்பீல்டு டீலர்ஷிப்புகளில் தனது பிரிமியம் மோட்டார்சைக்கிள்களை விற்கவும் இந்த கூட்டணி உதவும் என போலரிஸ் கணக்கு போட்டுள்ளது.

மறுபக்கம், மோட்டார்சைக்கிளுக்கான வி-டிவின் எஞ்சின்களை உருவாக்குவதற்கான தொழில்நுட்பத்தை ராயல் என்பீல்டுக்கு கொடுக்கவும், வெளிநாட்டு மார்க்கெட்டுகளில் ராயல் என்பீல்டு தயாரிப்புகளை விற்பனை செய்து கொடுக்கவும் போலரிஸ் முடிவு செய்துள்ளதாகவும், எனவே இந்த கூட்டணி அமைவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

Most Read Articles
English summary
Polaris Industries, the U.S automobile company well known for its ATVs, and the owner of Indian and Victory Motorcycles, plans to enter India in a big way. Polaris has planned to introduce Indian and Victory brands here in the near future.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X