ஆஸ்திரேலிய மோட்டோ ஜீபி: லாரென்ஸோ மோதிய கடற்பறவை!

ஆஸ்திரேலிய மோட்டோ ஜீபி பந்தயத்தில் முன்னணி வீரர் லாரென்ஸோ பைக்கின் மீது எதிர்பாராதவிதமாக கடற்பறவை மோதியதில் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த வாரம் ஆஸ்திரேலியாவின் பிலிப் தீவில் புதிதாக அமைக்கப்பட்ட பந்தய களத்தில் மோட்டோ ஜீபி மோட்டார்சைக்கிள் பந்தயம் விறுவிறுப்பாக நடந்தது. அப்போது லரென்ஸோ பைக்கில் கடற்பறவை மோதிய படங்களை ஸ்லைடரில் காணலாம்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

புதிதாக அமைக்கப்பட்ட களத்தில் தகுதிச்சுற்றுக்கான போட்டி நடந்தது. இந்த பந்தய களத்தில் மோட்டார்சைக்கிள்களின் டயர்கள் எளிதில் தேயும் அபாயம் இருப்பதாக, டயர் சப்ளையரான பிரிட்ஜஸ்டோன் எச்சரித்ததுடன், 14 சுற்றுகளுக்குள் கண்டிப்பாக டயரை மாற்ற வீரர்களுக்கு அறிவுறுத்தியது.

இக்கட்டான நிலை

இக்கட்டான நிலை

இந்த இக்கட்டான பாதுகாப்பு குறைவான சூழலில் வீரர்கள் களமிறங்கினர். முன்னணி வீரரான லாரென்ஸோ அதிவேகத்தில் பைக்கை செலுத்திக் கொண்டிருந்தபோது அங்கு பறந்து கொண்டிருந்த கடற் பறவைகளில் ஒன்று எதிர்பாராதவிதமாக பைக்கின் ரேடியேட்டர் பகுதியில் வந்து சிக்கிக்கொண்டது.

இலக்கு

இலக்கு

இலக்கை மட்டும் குறிவைத்து பறந்த லாரென்ஸோ நிலை தடுமாறாமல் தனது யமஹா பைக்கை செலுத்தி இந்த தகுதிச்சுற்றில் குறைந்த நேரத்தில் ஒரு சுற்றை நிறைவு செய்தார்.

சாதனை

சாதனை

கேஸி ஸ்டோனர் ஒரு சுற்றை 1:28,665 நிமிடத்தில் ஒரு சுற்றை நிறைவு செய்தது முந்தைய சாதனையாக இருந்தது. ஆனால், தற்போது லாரென்ஸோ ஒரு சுற்றை 1:27,899 நிமிடத்தில் நிறைவு செய்து புதிய சாதனை படைத்தார்.

 லாரென்ஸோ கருத்து

லாரென்ஸோ கருத்து

முதல் சுற்றின்போது ஏராளமான பறவைகள் அங்கு பறந்து கொண்டிருந்தன. அதில், ஒன்று என் மீது மோதிவிடும் என்று நினைத்தேன். ஒரு பறவை என் தலை அருகே வந்தபோது நான் சிரத்தை தாழ்த்தி வண்டியை செலுத்தினேன். ஆனால், அது என் பைக்கின் ரேடியேட்டரில் சிக்கிக் கொண்டது. போட்டி முடிந்த பின்தான் இந்த விஷயம் எனக்கு தெரிந்தது. இந்த சம்பவத்தால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை,:" என்று கூறினார்.

Most Read Articles
English summary
Amongst the excitement took place an unusual, but unfortunate event when an unlucky seagull got too close to Lorenzo's bike and got sucked into the radiator. The incident took place during the first lap.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X