சூரிய சக்தியில் இயங்கும் எலக்ட்ரிக் சைக்கிள்: திருவண்ணாமலை மாணவர்கள் சாதனை

By Saravana
Solar Bicycle
சூரிய சக்தி மூலம் இயங்கும் எலக்ட்ரிக் சைக்கிளை திருவண்ணாமலை, அருணை பொறியியல் கல்லூரி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.

இந்த கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையை சேர்ந்த மாணவர்கள் ஆர்.பார்த்தசாரதி, ஏ. பிரவீன்குமார், கே.ஜீவரத்தினம், ஆர்.சேகர் ஆகிய 4 பேரும் பேராசிரியர் எஸ்.கணேஷ்குமார் வழிகாட்டுதலின் பேரில் இந்த சைக்கிளை உருவாக்கியுள்ளனர்.

இந்த சைக்கிளை சமீபத்தில் கல்லூரி வளாகத்தில் வைத்து சோதனை நடத்தி காண்பித்தனர். ஒரு முறை சூரிய சக்தி மூலம் முழு சார்ஜ் ஆகிவிட்டால் 50 கிமீ., தூரம் வரை பயணிக்க முடியும். இதுதவிர, டைனமோவிலிருந்தும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு அதே பேட்டரியில் சேமிக்கப்படுகிறது.

70 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்ட இந்த சைக்கிளில் மொபைல்போன் சார்ஜர் மற்றும் ஹெட்லைட்டுக்கான மின்சாரம் சூரிய சக்தியை சேமிக்கும் பேட்டரியிலிருந்து பெற முடியும்.

இந்த சைக்கிளை வடிவமைத்த மாணவர்களை கல்லூரி முதல்வர் வி.ராமநாதன், கல்லூரி துணைத் தலைவர் எ.வ.குமரன், இயக்குநர் எம்.ஆறுமுகம், பதிவாளர் ஆர்.சத்தியசீலன், செயலாளர் மா.புர்க்கிந்தராஜ், துறைத் தலைவர் பிந்து மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பாராட்டினர்.

Most Read Articles
English summary
Students of Electrical and Electronics Engineering, Arunai Engineering College, Tiruvannamalai designed a Solar powered bicycle.
Story first published: Monday, May 13, 2013, 14:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X