இந்தியாவுக்காக புதிய 250சிசி பைக்கை தயாரிக்கும் டிரையம்ஃப்?

By Saravana

இந்திய மார்க்கெட்டுக்கு ஏற்ற அம்சங்கள் கொண்ட புத்தம் புதிய பைக்கை டிரையம்ஃப் தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்தை சேர்ந்த டிரையம்ஃப் நிறுவனம் விரைவில் இந்திய மார்க்கெட்டில் அடியெடுத்து வைக்க உள்ளது. கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிலேயே தனது அனைத்து மாடல்களையும் வரிசை கட்டியும், முறைப்படி மார்க்கெட்டில் இன்னும் களமிறங்கவில்லை.

மார்க்கெட்டில் மிக வலுவான இடத்தை பிடிக்கும் வகையிலான கட்டமைப்பு வசதிகளுடன் களமிறங்கவே இத்துனை கால தாமதம் செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், பெங்களூர் அருகே புதிய ஆலையையும் அமைத்து வருகிறது. இந்த நிலையில், இந்திய வாடிக்கையாளர்களை எளிதில் வசப்படுத்தும் அம்சங்கள் கொண்ட புதிய 250சிசி பைக்கை அந்த நிறுவனம் தயாரித்து வருவதாக ஆட்டோமொபைல் இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டு இருக்கிறது.

டிசைன்

டிசைன்

ஸ்ட்ரீட் டிரிப்பிள் மாடலைப் போன்றே இரட்டை ஹெட்லைட் கொண்டதாக இருக்கிறது. மேலும், 675 ரோட்ஸ்டெர் சாயலும் இருக்கிறது. ஆனால், எஞ்சின் அமைப்பு மற்றும் சிறிய டயர்கள் ஆகியவற்றின் மூலம் இது சிறிய வகை ஸ்போர்ட்ஸ் பைக் என்பதை அனுமானிக்க முடிகிறது.

எஞ்சின்

எஞ்சின்

எஞ்சின் அமைப்பை பார்க்கும்போது இது சிங்கிள் சிலிண்டர் கொண்ட 250சிசி எஞ்சினாக கருத முடிகிறது. ஹோண்டா சிபிஆர் 250ஆர், கவாஸாகி நின்ஜா 300, கேடிஎம் டியூக் 390 ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக இருக்கும்.

ஃப்ரேம்

ஃப்ரேம்

எஞ்சின் வைக்கப்பட்டிருக்கும் அமைப்பும் சிங்கிள் ஸ்டீல் டியூப் ப்ரேமில் வைக்கப்பட்டுள்ளதால், இது நிச்சயமாக என்ட்ரில் லெவல் ஸ்போர்ட்ஸ் பைக் என்பதை உறுதிப்படுத்துகிறது.

அதேதான்...

அதேதான்...

குறைவான விலை கொண்ட பைக் என்பதால், முன்புற ஃபோர்க்குகள் தடிமன் குறைவானதாகவும், சிறிய டயர்கள் பொருத்தப்பட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. பெரும்பாலான கால் லிட்டர் எஞ்சின் கொண்ட பைக்குகளில் இதுபோன்ற பாகங்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன.

இருக்கை

இருக்கை

ஸ்பிளிட் இருக்கை கொடுக்காமல் ஒரே இருக்கை அமைப்பும், கிராப் ரெயிலும் இதனை குறைந்த விலை பைக் என்பதை எளிதாக காட்டிக் கொடுக்கிறது.

குறைந்த விலை

குறைந்த விலை

குறைந்த விலை ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கான வரவேற்பு வளரும் நாடுகளில் அதிகரித்து வருகிறது. இதனை கருதி கேடிஎம் நிறுவனம் மிக சவாலான விலையில் தனது பைக்குகளை களமிறக்கி வருகிறது. இதே ஃபார்முலாவை எடுத்து டிரையம்ஃப் நிறுவனமும் புதிய பைக்கை களமிறக்குவதாக பேச்சு அடிபடுகிறது.

இந்தியாவில் உற்பத்தி?

இந்தியாவில் உற்பத்தி?

இந்த புதிய பைக் கர்நாடகாவில் கட்டப்பட்டு வரும் புதிய ஆலையில் அல்லது தாய்லாந்து ஆலையில் உற்பத்தி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. வரும் பிப்ரவரி மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய பைக்கை டிரையம்ஃப் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படங்கள் உதவி: Chris Doane Automotive LLC

Most Read Articles
English summary
Triumph Motorcycles' formal entry into India is near. Proof of fact is this entry level, presumably 250cc Triumph naked street bike styled like the Street Triple. The British bike manufacturer has been planning its entry into India for a long time now. Their bikes were even on display at the 2012 Indian Auto Expo.
Story first published: Saturday, October 19, 2013, 10:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X