3 வீல் மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தும் யமஹா!

அடுத்த ஆண்டு மல்டி வீல் மோட்டார்சைக்கிளை யமஹா அறிமுகப்படுத்த இருக்கிறது. பியாஜியோ எம்பி3 போன்று இருந்தாலும், யமஹாவின் சொந்த டிசைன் கான்செப்ட்டில் இந்த 3 சக்கர மோட்டார்சைக்கிள் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

2007ம் ஆண்டு டோக்கியோ மோட்டார் ஷோவில் முதன்முறையாக இதன் கான்செப்ட் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. அப்போதே கவனத்தை ஈர்த்த இந்த மோட்டார்சைக்கிள் இப்போது உற்பத்தி நிலைக்கு செல்ல இருப்பதாக யமஹா அறிவித்துள்ளது ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளறியுள்ளது.

வரும் நவம்பரில் நடைபெற இருக்கும் டோக்கியோ மோட்டார் ஷோவிலும், இத்தாலியில் நடைபெற இருக்கும் இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சியிலும் இந்த மோட்டார்சைக்கிளின் உற்பத்தி நிலை மாடல் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. இதுதவிர, டோக்கியோ ஆட்டோ ஷோவில் அல்ட்ரா காம்பெக்ட் என்று சொல்லப்படும் மிகச்சிறிய நான்கு சக்கர வாகனத்தையும் அறிமுகம் செய்ய இருப்பதாக யமஹா தெரிவித்துள்ளது.

இது பியாஜியோ எம்பி3

இது பியாஜியோ எம்பி3

படத்தில் காண்பது பியாஜியோவின் 3 சக்கர எம்பி3 ஸ்கூட்டர். இது வளைவுகளில் திரும்பும்போது முன்னால் பொருத்தப்பட்டிருக்கும் சக்கரங்கள் அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிசைன் தாத்பரியம்

டிசைன் தாத்பரியம்

பியாஜியோ எம்பி3 ஸ்கூட்டரின் டிசைன் தாத்பரியத்தை மனதில் கொண்டு அதன் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் டிசைனை தனது மல்டி வீலரில் கையாண்டுள்ளது யமஹா.

3 வீலர்

3 வீலர்

யமஹாவின் லீனிங் மல்டி வீலர் 3 சக்கரங்களை கொண்டதாக இருக்கிறது. பார்ப்பதற்கு ஸ்போர்ட்டியாகவும், நடைமுறைக்கு எளிதாக சாத்தியப்படக்கூடிய வடிவமைப்பையும் கொண்டிருக்கிறது.

 சோதனை படம்

சோதனை படம்

புதிய மல்டி வீலரை சோதனை செய்தபோது எடுத்த படத்தை யமஹா வெளியிட்டுள்ளது.

 கனக்கச்சிதம்

கனக்கச்சிதம்

இது பியாஜியோவின் ஸ்கூட்டரைவிட கச்சிதமாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.

யமஹாவின் 4 வீலர்

யமஹாவின் 4 வீலர்

படத்தில் இருப்பது யமஹாவின் தெசராக்ட் கான்செப்ட் 4 வீலர் மோட்டார்சைக்கிள். 2007ம் ஆண்டு டோக்கியோ மோட்டார் ஷோவில் இந்த கான்செப்ட் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

மோட்டார்சைக்கிளை எளிதாக செலுத்த உதவும் வகையில் தானாக அட்ஜெஸ்ட் செய்யும் பிரத்யேக சஸ்பென்ஷன் செட்டிங்குடன் இந்த 4 வீலர் டிசைன் செய்யப்பட்டிருந்தது.

உற்பத்தி சந்தேகம்?

உற்பத்தி சந்தேகம்?

இந்த தெசராக்ட் 4 வீலர் உற்பத்தி நிலைக்கு செல்லுமா என்பது சந்தேகம் நிலவுகிறது.அடுத்த ஸ்லைடுகளில் யமஹா விற்பனைக்கு கொண்டு வர இருக்கும் 3 வீலர் பற்றிய கூடுதல் தகவல்கள்.

பன்முக பயன்பாடு

பன்முக பயன்பாடு

யமஹாவின் புதிய 3 வீலர் பைக் போன்று ஸ்போர்ட்டியான தோற்றம் மற்றும் வேகத்தையும், ஸ்கூட்டர் போன்ற சொகுசையும் ஒருங்கே வழங்கும் வாகனமாக இருக்கும் என யமஹாவின் தலைவர் ஹிரோயுகி யனாகி தெரிவித்தார்.

விலை

விலை

10,000 டாலர் விலையில் இந்த புதிய ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும் என யமஹா தலைவர் தெரிவித்துள்ளார்.

Most Read Articles
மேலும்... #yamaha #two wheeler #யமஹா
English summary
Yamaha has confirmed that it will launch its first production Leaning Multi-Wheeler (LMW) in 2014. Yamaha's tilting vehicle will sport three wheels, similar to the Piaggio MP3 and unlike its own concept, the four wheeled Tesseract leaning motorcycle, which was revealed at the 2007 Tokyo Motor Show.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X