சூப்பரான வசதிகளுடன் விற்பனைக்கு வந்தது புதிய ஹீரோ ப்ளஷர் ஸ்கூட்டர்!

By Saravana

மாதாமாதம் ஒன்றிரண்டு புதிய மாடல்களை அறிமுகம் செய்து மார்க்கெட்டை அதகளப்படுத்தி வருகிறது ஹீரோ மோட்டோகார்ப். இந்த மாதத்திற்கான ஒரு புதிய மாடலை சத்தமில்லாமல் விற்பனைக்கு விட்டுள்ளது.

தற்கால மார்க்கெட் டிரென்ட்டை அடிப்படையாகக் கொண்டு மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ப்ளஷர் ஸ்கூட்டரை அந்த நிறுவனம் விற்பனைக்கு விட்டுள்ளது. இந்த புதிய மாடலில் இருக்கும் சிறப்பம்சங்கள் அனைத்தையும் உங்கள் பார்வைக்கு ஸ்லைடரில் கொடுத்துள்ளோம்.

டியூவல் டோன் கலர்

டியூவல் டோன் கலர்

புதிய ப்ளஷர் ஸ்கூட்டரின் தோற்ற வசீகரத்தை கூட்டும் விதத்தில் இரட்டை வண்ணத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 மாற்றங்கள்

மாற்றங்கள்

புதிய அலாய் வீல்கள் ஸ்கூட்டரின் தோற்றத்துக்கு கூடுதல் வலு சேர்க்கிறது. புதிய கிராப் ரெயில், டெயில் லைட், இன்டிகேட்டர்கள் டிசைன் மாறியிருக்கிறது.

புதிய பிரேக் சிஸ்டம்

புதிய பிரேக் சிஸ்டம்

ஆக்டிவாவில் இருக்கும் கோம்பி பிரேக் அமைப்பு போன்று ஹீரோ நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்த ஐபிஎஸ் பிரேக் சிஸ்டத்துடன் இந்த புதிய ப்ளஷல் வந்துள்ளது. இரு பிரேக் லிவர்களில் ஒன்றை பிடித்தால் கூட முன், பின் என இரு பிரேக்குகளும் ஒருசேர இயங்கும் என்பதால் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும்.

வசதிகள்

வசதிகள்

சைடு ஸ்டான்டு போட்டிருந்தால் அதனை எச்சரிக்கும் இண்டிகேட்டர் வசதி, மொபைல் சார்ஜிங் பாயிண்ட், ட்யூப்லெஸ் டயர்கள், பொருட்கள் வைக்கும் இடத்தில் சிறிய லைட் போன்றவை குறிப்பிட்டு கூறும் வசதிகளாக இருக்கின்றன.

எஞ்சின்

எஞ்சின்

எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. 6.83 பிஎஸ் பவரை அளிக்கும் 102சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக மணிக்கு 77 கிமீ வேகம் வரை செல்லும்.

 விலை

விலை

அலாய் வீல்கள், ஸ்டீல் வீல்கள் என இரு மாடல்களில் கிடைக்கும். அலாய் வீல் மாடலுக்கு ரூ.49,126 மும்பை எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைவிட ஸ்டீல் வீல் மாடல் ரூ.1,500 குறைவு.

Most Read Articles
English summary
Without any fanfare Hero MotoCorp has launched the facelifted 2014 Pleasure automatic scooter in India for a price of Rs 49,126 (ex-showroom, Mumbai).
Story first published: Wednesday, April 2, 2014, 12:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X