மேம்படுத்தப்பட்ட புதிய யமஹா எஃப்இசட் மற்றும் எஃப்இசட் எஸ் பைக்குகள் விற்பனைக்கு வந்தன!

மேம்படுத்தப்பட்ட அம்சங்கள், புதிய தொழில்நுட்பம் கொண்ட எஞ்சினுடன் புதிய யமஹா எஃப்இசட் (வெர்ஷன் 2) மற்றும் எஃப்இசட் எஸ் (வெர்ஷன் 2) பைக்குகள் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பல்வேறு மாறுதல்கள் கண்டிருக்கும் இந்த புதிய பைக் மாடலை பாலிவுட் நடிகரும், யமஹா நிறுவனத்தின் விளம்பர தூதருமான ஜான் ஆபிரஹாம் அறிமுகம் செய்தார்.

இந்திய மார்க்கெட்டில் இளைஞர்களை பெரிதும் கவர்ந்த யமஹாவின் எஃப்இசட்16 மற்றும் எஃப்இசட் எஸ் பைக் மாடல்களுக்கு மாற்றாக இந்த புதிய பைக் மாடல்கள் புதுப்பொலிவுடன் வந்துள்ளன. ஸ்டைல், பெர்ஃபார்மென்ஸ் மற்றும் ரிபொருள் சிக்கனம் என அனைத்து விதங்களிலும் சிறப்பாக வந்திருக்கும் இந்த புதிய பைக்குகள் பற்றிய கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் கொடுத்துள்ளோம்.


டிசைன்

டிசைன்

புதிய எஃப்இசட் எஸ் பைக்கில் ஹெட்லைட், பின்புற ஃபென்டர், ஸ்பிளிட் இருக்கைகள், கிராப் ரெயில்கள் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டு சிறப்பான தோற்றத்தை தருகின்றன. எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரும் குறிப்பிட்டு சொல்லலாம். முன்புற, பின்புற சஸ்பென்ஷன் செட்டிங்குகளும் புதிது. ஸ்டைலை விரும்பும் இளைஞர்களுக்கு மிகச்சரியான சாய்ஸ் என்று சொல்லுமளவிற்கு தோற்றத்தை கொண்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

முந்தைய மாடல்களில் 153சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருந்த நிலையில், புதிய மாடல்களில் 149சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும், முந்தைய மாடலைவிட இது 3 கிலோ எடை குறைவாக புதிய மாடல் வந்துள்ளது.

 ஃப்யூவல் இன்ஜெக்ஷன்

ஃப்யூவல் இன்ஜெக்ஷன்

இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் எஞ்சின் 13.1 பிஎஸ் பவரையும், 12.8 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துவதாக இருக்கும். இந்த புதிய மாடலின் எஞ்சின் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் வந்துள்ளதால் அதிக மைலேஜையும், சிறப்பான பெர்ஃபார்மென்சையும் வழங்கும்.

யமஹாவின் பரிந்துரை

யமஹாவின் பரிந்துரை

இதன் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்தை 6,000 கிமீ.,க்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும் என யமஹா தெரிவித்துள்ளது.

உராய்வு குறைவு

உராய்வு குறைவு

எஞ்சினில் உராய்வுத்தன்மை குறைவான யமஹாவின் புதிய புளு கோர் தொழில்நுட்பம் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இது 14 சதவீதம் கூடுதல் மைலேஜை வழங்கும்.

வண்ணங்கள்

வண்ணங்கள்

புதிய எஃப்இசட் மாடல் பாந்தர் பிளாக், ஸ்கார்ச்சிங் ரெட் ஆகிய வண்ணங்களிலும், புதிய எஃப்இசட் எஸ் மாடல் அஸ்த்ரல் புளூ, மூன்வாக் ஒயிட், சைபர் க்ரீன் மற்றும் மோல்டென் ஆரஞ்ச் ஆகிய 4 வண்ணங்களிலும் கிடைக்கும்..

விலை விபரம்

விலை விபரம்

ஃப்யூவல் இன்ஜெக்ஷன் எஞ்சினுடன் வந்திருக்கும் புதிய யமஹா எஃப்இசட் ரூ.76,250 விலையிலும், புதிய யமஹா எஃப்இசட் எஸ் பைக் மாடல் ரூ.78,250 விலையிலும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

விற்பனை

விற்பனை

இந்த புதிய பைக் மாடல்கள் நாடு முழுவதும் உள்ள யமஹா ஷோரூம்களில் நாளை முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Yamaha Motor India Sales Pvt. Ltd., today launched 2 new models to comprise its very successful FZ Series. The new models FZ Version 2.0 and FZ-S Version 2.0 are mounted with a newly designed air-cooled 149cc 4-stroke, SOHC, single-cylinder fuel-injected engine on a lightweight frame to realize the product concept of a “Sharpened & Power-packed New FZ.” With the launch of these new models targeted at young men between the ages of 18-30, the company hopes to see a steep growth in the customer base, especially keeping in mind the mileage conscious target audience.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X