2015 இந்திய பைக் வீக் திருவிழாவிற்கான அட்டவணை அறிவிப்பு

By Saravana

கோவாவில் நடைபெற இருக்கும் 3வது இந்திய பைக் வீக் திருவிழாவிற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆசியாவின் மிகப்பெரிய பைக் திருவிழாவாக கருதப்படும் இந்திய பைக் வீக் திருவிழா 3வது முறையாக கோவாவில் நடைபெற உள்ளது.

India Bike Week

செவன்ட்டி ஈவன்ட் மீடியா குழுமமும், ஃபாக்ஸ் லைஃப் தொலைக்காட்சியும் இணைந்து இந்த பைக் வீக் திருவிழாவை நடத்த உள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே 3வது இந்திய பைக் வீக் திருவிழாவிற்கு ஹார்லி டேவிட்சன் நிறுவனம் முதன்மை ஸ்பான்சராக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 3வது பைக் வீக் திருவிழா வரும் பிப்ரவரி மாதம் 20 மற்றும் 21 தேதிகளில் கோவாவின் வகதூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான டிக்கெட் விற்பனை அக்டோபர் 7ந் தேதி துவங்குகிறது. ரூ.3,000 டிக்கெட் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனை துவங்கி முதல் 5 நேரத்தில் இரண்டு டிக்கெட் வாங்குபவர்களுக்கு இரண்டாவது டிக்கெட்டில் 50 சதவீதம் கழிவு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, கோவை உள்ளிட்ட நாட்டின் 8 நகரங்களில் இருக்கும் பைக் பிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
India’s largest festival planners the SEVENTY Event Media Group, together with the No.1 Travel and Lifestyle channel, FOX Life will hold the India Bike Week 2015 at Vagator in Goa on February 20 and 21 next year.
Story first published: Saturday, September 13, 2014, 10:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X