சீனா செல்லும் 'மேட் இன் இந்தியா' கேடிஎம் பைக்குகள்!

By Saravana

இந்தியாவிலிருந்து சீனாவிற்கு கேடிஎம் பைக்குகள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. உள்நாட்டு மார்க்கெட்டில் நீடித்து வரும் மந்தநிலையை கருத்தில்கொண்டு சீனாவில் கேடிஎம் பைக்குகளை விற்பனைக்கு விடுவதற்கு பஜாஜ் ஆட்டோ முடிவு செய்துள்ளது.

இந்த வாரத்திலிருந்து சீனாவிற்கு கேடிஎம் பைக்குகள் ஏற்றுமதி துவங்குகிறது. இதன்மூலம், வர்த்தக வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும் என்று பஜாஜ் ஆட்டோ நம்புகிறது.

மார்க்கெட் லீடர்

மார்க்கெட் லீடர்

இந்தியா போன்றே சீனாவும் வலுவான அடித்தளம் கொண்ட பைக் மார்க்கெட்டாக இருக்கிறது. சீன இருசக்கர வாகன மார்க்கெட்டில் சுஸுகி மற்றும் ஹோண்டா முன்னிலை வகிக்கின்றன. இந்த நிறுவனங்களையும் எதிர்கொண்டு தனது வர்த்தகத்தை கேடிஎம் துவங்க இருக்கிறது.

முதல் மாடல்

முதல் மாடல்

கேடிஎம் டியூக் 390 பைக் முதலாவது மாடலாக சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, கேடிஎம் டியூக் 200 பைக்கும் அங்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

இலக்கு

இலக்கு

முதல் ஆண்டில் 300 கேடிஎம் பைக்குகளை இந்தியாவிலிருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய பஜாஜ்- கேடிஎம் கூட்டணி இலக்கு வைத்துள்ளன. தற்போது பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மாதத்திற்கு ஒரு லட்சம் பைக்குகளை ஏற்றுமதி செய்கிறது.

 சரியான விலை

சரியான விலை

ஆஸ்திரிய நிறுவனமான கேடிஎம் நிறுவனத்தின் 47 சதவீத பங்குகளை பஜாஜ் ஆட்டோ தனது கைவசம் வைத்துள்ளது. இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படுவதன் மூலம் மிக சரியான விலையில் பைக்குகளை இந்த கூட்டணி விற்பனை செய்ய முடிகிறது. எனவே, போட்டியாளர்களை வெகு எளிதாக கையாளும் விலையில் பைக்குகளை அறிமுகம் செய்து வருகின்றன.

Most Read Articles
English summary
The current slowdown in automotive sales has affected Indian two wheeler giant Bajaj too. They now are finding ways to counter their decline in sales. They now will be exporting the KTM that is made in India to China. KTM is expected to launch their bikes in China in the coming weeks.
Story first published: Monday, March 31, 2014, 11:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X