புதிய பஜாஜ் டிஸ்கவர் 125எம் சிறப்பம்சங்கள்: ஒரு பார்வை

By Saravana

கடந்த நிதி ஆண்டில் 100சிசி முதல் 125சிசி வரையிலான பைக் மார்க்கெட்டில் 4 சதவீத பங்களிப்பை இழந்திருக்கிறது பஜாஜ் ஆட்டோ. இந்த செக்மென்ட்டில் டிஸ்கவர் வரிசையிலான பைக்குகளை விற்பனை செய்து வருகிறது பஜாஜ் ஆட்டோ.

மார்க்கெட் பங்களிப்பை அதிகரிப்பதற்காக டிஸ்கவர் வரிசையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட மாடல்கள் கைகொடுக்கவில்லை. இந்தநிலையில், மிகுந்த நம்பிக்கையுடன் புதிய டிஸ்கவர் மாடலாக 125எம் மாடலை கடந்த மாதம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது பஜாஜ் ஆட்டோ. தனது மார்க்கெட் பங்களிப்பை அதிகரிப்பதற்கான ஒரே ஆயுதமாக பஜாஜ் ஆட்டோ நம்பி இறக்கியுள்ள டிஸ்கவர் 125எம் பைக்கின் முக்கிய சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

புதிய பஜாஜ் டிஸ்கவர் 125எம் பைக்கின் சிறப்பம்சங்களின் தகவல்கள் ஸ்லைடரில் தொடர்கிறது!

டிசைன்

டிசைன்

வழக்கமான டிஸ்கவர் பைக்குகளின் தோற்றத்தையே இந்த பைக்கும் கொண்டுள்ளது. ஆனால், சில சிறப்பம்சங்களை சேர்த்து இந்த பைக்கை தனித்துவப்படுத்தியிருக்கிறது பஜாஜ் ஆட்டோ அதனை தொடர்ந்து காணலாம்.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த பைக்கில் 124.6சிசி ஏர்கூல்டு டிடிஎஸ்-ஐ எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக 11.3 பிஎச்பி ஆற்றலையும், 10.8 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

மைலேஜ்

மைலேஜ்

டிஸ்கவர் 125எம் என்ற பெயரில் கடைசியில் ஒட்டியிருக்கும் எம் என்ற எழுத்து மைலைஜை குறிக்கிறதாம். பிற பைக் மாடல்களைவிட 25 சதவீதம் அதிக எரிபொருள் சிக்கனம் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. லிட்டருக்கு 76 கிமீ மைலேஜ் தரும் என்கிறது பஜாஜ் ஆட்டோ.

டிஸ்க் பிரேக்

டிஸ்க் பிரேக்

முன்புறத்திலும், பின்புறத்திலும் 130 மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக் நிரந்தர அம்சமாக உள்ளது. முன்புறத்திற்கான 200மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக் ஆப்ஷனலாக கிடைக்கிறது.

 இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

எலக்ட்ரிக் ஸ்டார்ட்டர், 10 ஸ்போக்குகள் கொண்ட கறுப்பு நிற அலாய் வீல்கள், பின்புறத்தில் ட்வின் நைட்ராக்ஸ் ஷாக் அப்சார்பர்கள் போன்றவை நிரந்தர அம்சங்களாக இருக்கும்.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு 100 கிமீ வேகம் டாப்ஸ்பீடாக கொண்டிருக்கிறது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

எலக்ட்ரான் புளூ, ஒயின் ரெட், சார்கோல் மெஜந்தா, சார்கோல் பச்சை, சில்வர் புளூ மற்றும் சில்வர் கோல்டு ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.

 விலை

விலை

டிஸ்கவர் 125எம் பைக் ரூ.48,000 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்புறத்தில் 200மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக் கொண்ட மாடல் ரூ.50,000 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

Most Read Articles
Story first published: Friday, May 2, 2014, 14:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X