இந்த சூப்பர் பைக் எது தெரிகிறதா... சத்தியமா நம்ம பல்சர்தான்!

By Saravana

நம் நாடு மட்டுமின்றி சர்வதேச அளவில் பல நாடுகளில் இளைஞர்களின் அமோக ஆதரவை பெற்ற மாடல் பல்சர். அதிலும், பல்சர் 220 பைக் இளசுகளிடம் அதிக ஆர்வத்தை ஏற்படுத்திய மாடல். கடந்த 2007ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த மாடல் கிளிப் ஆன் ஹேண்டில்பார், ரியர் டிஸ்க் பிரேக், ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் என பல்வேறு நவீன சிறப்பம்சங்களுடன் தயாரிக்கப்பட்ட மேட் இன் இந்தியா பைக் என்ற பெருமையையும் கொண்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இதன் டிசைனும் பெரிதும் விரும்பப்பட்டது. சிறிய மாற்றங்களுடன் பல்சர் 220 பைக் தொடர்ந்து விற்பனையில் இருந்து வருகிறது. ஆனால், பல்சர் 200 எஃப்ஐ மாடலை பஜாஜ் ஆட்டோ மார்க்கெட்டிலிருந்து விலக்கிக் கொண்டது. ஆனால், பல்சர் 220எஃப் என்ற பெயரில் தற்போது தாக்குப் பிடித்து வருகிறது.

இந்த நிலையில், இந்தோனேஷியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது பல்சர் பைக்கை ஒரு சூப்பர் பைக் போன்று மாற்றியுள்ளார். பிளசிங் மோட்டார் என்ற நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் தான் விரும்பியபடி பல்சர் 220எஃப்ஐ பைக்கை மாற்றியுள்ளார். சூப்பர் பைக் அவதாரம் எடுத்துள்ள பல்சர் 220 பைக்கின் படங்களையும், கூடுதல் தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

கஸ்டமைஸ் பாகங்கள்

கஸ்டமைஸ் பாகங்கள்

இந்த பல்சரை மாற்றுவதற்காக பல்வேறு பைக்குகளின் உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதன் விபரங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

பாடி

பாடி

ஃபேரிங் பேனல்கள், பெட்ரோல் டேங்க், டெயில் மாடல் ஆகியவை சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்600 பைக்கின் பாகங்கள். டெல்டா பாக்ஸ் ஃப்ரேம் அப்ரிலியா பைக்கின் உதிரிபாகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இன்ஸ்ட்ரூமென்ட் பேனல்

இன்ஸ்ட்ரூமென்ட் பேனல்

கார்பன் ஆக்சென்ட் கொண்ட கஸ்டமைஸ்டு ஸ்பீடோமீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

ஹெட்லைட்

ஹெட்லைட்

முன்புறம் மற்றும் பின்புற லைட்டுகளில் மாற்றம் செய்யப்படவில்லை. அது பல்சர் 220 பைக்கிலிருந்து தக்க வைக்கப்பட்டுள்ளன.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

முன்புறத்தில் யமஹா ஆர்6 அப்சைடு டவுன் ஃபோர்க்கும், பின்புறத்தில் ஹோண்டா ஆர்விஎஃப்400 ஸ்விங் ஆர்ம் மற்றும் மோனோஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டுள்ளன.

ரிம்

ரிம்

என்கெய் ஹோண்டா ஆர்விஎஃப் 400 பைக்கின் ரிம் முன்புறத்திலும், பின்புறத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

டயர்கள்

டயர்கள்

முன்புறத்திலும், பின்புறத்திலும் மிச்செலின் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மஃப்ளர்

மஃப்ளர்

பிஎம் கஸ்டம் சிபி1000 மஃப்ளர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மாஸ்டர் பிரேக்

மாஸ்டர் பிரேக்

முன்புறத்தில் கவாஸாகி இஆர்6 என் பைக்கின் மாஸ்டர் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

ஃபென்டர்கள்

ஃபென்டர்கள்

முன்புறத்தில் யமஹா ஆர்6 பைக்கின் ஃபென்டரும், பின்புறத்தில் கவாஸாகி நின்ஜா 250 ஃபென்டரும் பொருத்தப்பட்டுள்ளன.

செலவு

செலவு

பல்சர் 220 பைக்கை இவ்வாறு சூப்பர் பைக் போன்று மாற்றுவதற்கு எவ்வளவு செலவானது என்பதை அதன் உரிமையாளர் தெரிவிக்கவில்லை. ஆனால், நிச்சயம் ஒரு மிட்சைஸ் ஸ்போர்ட்ஸ் பைக்கின் விலையை தொட்டிருக்கும்.

படங்கள் உதவி

படங்கள் உதவி

Images source:Stephenlangitan

Via:Rushlane

Most Read Articles
Story first published: Friday, March 28, 2014, 11:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X