குட் நியூஸ்... விரைவில் இந்தியா வருகிறது புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர்!

By Saravana

ஜெர்மனியில் நடந்த இன்டர்மோட் மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் ஸ்க்ராம்ப்ளர் என்ற புதிய மோட்டார்சைக்கிளை டுகாட்டி அறிமுகம் செய்தது. பழமையான டிசைன் தாத்பரியத்தில் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய பைக் 4 விதமான மாடல்களில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், இந்த புதிய பைக்கை அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக டுகாட்டி தெரிவித்துள்ளது. குறைவான விலை கொண்ட டுகாட்டி மாடல் என்பதால் இந்திய பைக் பிரியர்கள் மத்தியில் இந்த மோட்டார்சைக்கிள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


 பழமையான டிசைனா?

பழமையான டிசைனா?

இதன் டிசைன் பழைய டுகாட்டி மோட்டார்சைக்கிள் போன்று தெரிந்தாலும், இது பழமையான டிசைன் கொண்ட மாடல் இல்லை என்று டுகாட்டி தெரிவித்துள்ளது.

மேட் இன் தாய்லாந்து

மேட் இன் தாய்லாந்து

தாய்லாந்து நாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிற்கு ஏற்றுமதியாகும் என டுகாட்டி தெரிவித்துள்ளது. இதுதவிர, உலக அளவில் பல்வேறு நாடுகளிலும் இந்த புதிய மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு செல்ல இருக்கிறது. ஜனவரி இறுதி வாரத்தில் தாய்லாந்திலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி துவங்கப்பட உள்ளது.

மாடல்கள்

மாடல்கள்

ஐகான், அர்பன் என்டியூரோ, ஃபுல் த்ராட்டில், கிளாசிக் ஆகிய 4 மாடல்களில் புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது. அதில், ஐகான் என்ற மாடல் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்த தகவல் இல்லை.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.7 லட்சம் விலையில் இந்தியாவில் இந்த புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

இந்தியாவில் கவாஸாகி இசட்800, ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆகிய மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
Italian superbike maker Ducati is planning to launch new Scrambler in India by next year.
Story first published: Wednesday, October 8, 2014, 9:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X