ஹீரோ பார்ட்னர் எரிக் புயெலின் புதிய சூப்பர் பைக்!

By Saravana

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பார்டனரான அமெரிக்காவை சேர்ந்த எரிக் புயெல் நிறுவனம் புதிய சூப்பர் பைக்கை வெளியிட்டு இருக்கிறது. எரிக் புயெல் நிறுவனத்தின் எரிக் புயெல் 1190ஆர்எக்ஸ் ஸ்ட்ரீட் ஃபைட்டர் பைக்கில் சில மாற்றங்களை செய்து நேக்டு ஸ்டைல் மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது.

எரிக் புயெல் 1190எஸ்எக்ஸ் என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த புதிய பைக் வேறுபட்ட ஓட்டுதல் அம்சங்களை கொண்டதாகவும், எஞ்சினில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டும் வந்துள்ளது. இண்டியான போலிஸ் மோட்டார்வேயில் நடந்த டெஸ்ட் டிரைவ் நிகழ்ச்சியின் மூலம் இந்த பைக்கின் விபரங்கள் வெளியிடப்பட்டன.


எஞ்சின்

எஞ்சின்

எஞ்சின் பற்றிய முழுமையான விபரங்களை எரிக் புயெல் வெளியிடப்படவில்லை. இந்த பைக்கில் 1190சிசி வி ட்வின் லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது 185 எச்பி ஆற்றலையும், 138 என்எம் டார்க்கையும் அளிக்கும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கிறது. இது மிட்ரேஞ்ச்சில் அதிக டார்க்கை வழங்கும் விதத்தில் மாற்றப்பட்டிருக்கிறது.

டிஸ்க் பிரேக்

டிஸ்க் பிரேக்

இந்த புதிய சூப்பர் பைக்கில் முன்புற சக்கரத்தில் இசட்டிஎல் 386மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 220மிமீ சிங்கிள் டிஸ்க் கொண்ட டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டிருக்கிறது. டிஎஃப்டி கலர் டிஸ்ப்ளே கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், மல்டி லெவல் டிராக்ஷன் கன்ட்ரோல் போன்றவை இருக்கின்றன.

அலுமினியம் ஃப்ரேம்

அலுமினியம் ஃப்ரேம்

இந்த பைக்கில் அலுமினியம் ஃப்ரேம் பொருத்தப்பட்டிருக்கிறது. மெக்னீசியத்திலான சப் ப்ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் எரிபொருள் நிரப்பும் வசதியும் கொண்டதாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டிருக்கிறது.

எல்இடி ஹெட்லைட்

எல்இடி ஹெட்லைட்

இதன் ஹெட்லைட் டிசைன் மாற்றப்பட்டுள்ளது. இதில் எல்இடி ஹெட்லைட் பொருத்தப்ப்ட்டிருக்கிறது. இதில் டிபியூலர் ஹேண்டில்பார் பொருத்தப்பட்டிருப்பதால் அதிக சவுகரியத்தை கொடுக்கும்.

அறிமுகம்

அறிமுகம்

அடுத்த மாதம் 4ந் தேதி எரிக் புயெல் 1190எஸ்எக்ஸ் சூப்பர் பைக் முறைப்படி அறிமுகம் செய்யப்பட உள்ளது. அப்போது முழு விபரங்களும் வெளியிடப்படும். இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் விற்பனைக்கு வருகிறது. 1190ஆர்எக்ஸ் பைக்கைவிட விலை குறைவாக நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Erik Buell Racing, Hero MotoCorp's partially owned U.S partner, has unveiled a new streetfighter category motorcycle based on its 1190RX superbike. The 2015 Erik Buell Racing 1190SX, as it is called, made its debut at the Indianapolis Motor Speedway.
Story first published: Friday, June 13, 2014, 11:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X