ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்குக்கான கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் விபரம்!

By Saravana

ரூ.4.10 லட்சம் என்ற மிக சவாலான விலையில் ஸ்ட்ரீட் 750 பைக்கை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களையும், போட்டியாளர்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது ஹார்லி டேவிட்சன். ரூ.5 லட்சத்திற்குள் ஆன்ரோடு விலையில் அடங்கிவிடும் இந்த ஹார்லி பிராண்டு பைக் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் மாடல். பெரும்பான்மையான பாகங்கள் உள்நாட்டு சப்ளயைர்களிடமிருந்தே பெறப்படுகின்றன. இந்த பைக்குக்கு எம்ஆர்எஃப் நிறுவனம்தான் டயர்களை சப்ளை செய்கிறது.

இது ஒருபுறம் இருக்க, இந்த புதிய ஹார்லி பைக்கை முதன்முறையாக பார்த்தபோது, அவ்வளவாக கவரவில்லை. ஆனால், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ரீட் 750 பைக் தோற்றத்தில் பன்மடங்கு அழகு கூடியிருந்தது. இதற்கு காரணம், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மாடலில் ஏராளமான கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் பொருத்தப்பட்டிருந்ததால், அதன் தோற்றமே வேறு நிலைக்கு மாறியிருந்தது. அது எந்தெந்த ஆக்சஸெரீஸ் என்பதை ஸ்லைடரில் வழங்கியுள்ளோம்.

வைசர்

வைசர்

முன்புறத்தில் வைசர் கண்ணாடி கூடுதல் ஆக்சஸெரீயாக பெற்றுக் கொள்ள முடியும். இந்த வைசர் கண்ணாடி பைக்கின் முன்பக்க அழகை கூட்டுவதற்கு மட்டுமின்றி, தூசி மற்றும் பூச்சிகள் ஓட்டுபவரின் முகத்தில் அடிக்காமல் பாதுகாப்பையும் வழங்கும்.

சேடில் பேக்

சேடில் பேக்

நீண்ட தூர பயணங்களுக்கு செல்லும்போது, அதிக பொருட்களை எளிதாக எடுத்துச் செல்வதற்காக 'சேடில்' பேக்கையும் கூடுதல் ஆக்சஸெரீயாக வாங்கிக் கொள்ள முடியும்.

ஃபுட் பெக்ஸ்

ஃபுட் பெக்ஸ்

கால்களை வசதியாக வைத்து ஓட்டுவதற்காக பெரிய ஃபுட் பெக்ஸ் மற்றும் அகலாமான, சொகுசான இருக்கை ஆகியவையும் கூடுதல் ஆக்சஸெரீஸ்களாக வாங்கிக் கொள்ளலாம்.

டேங்க் பேக்

டேங்க் பேக்

இவற்றை தவிர பெரிய டேங்க் பேக் ஒன்றையும் ஹார்லி டேவிட்சன் வழங்குகிறது. இதனையும் கூடுதல் ஆக்சஸெரீயாக பெற்றுக் கொள்ளலாம்.

கஸ்டம் பெயிண்ட்

கஸ்டம் பெயிண்ட்

ஹார்லி 750 பைக்கிற்கு கஸ்டம் பெயிண்ட் செய்து கொள்ள முடியும். அத்தோடு, வேறு டிசைன் கொண்ட வீல்களும் கூடுதல் ஆக்சஸெரீயாக வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 13 ஹார்லி டேவிட்சன் ஷோரூம்களிலும் இந்த ஆக்சஸெரீஸ்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
The Harley Davidson 750 was unveiled to H.O.G.S during India Bike Week in goa. Back then however, they did not reveal the pricing of the bike and promised it will be affordable and a sub five lakh cruiser.
Story first published: Friday, February 14, 2014, 11:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X