இந்தியர்களுக்கு தரிசனம் தரப்போகும் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750!

இந்தியாவில் தற்போது நடைபெறும் பிரம்மாண்டமான ஒரே பைக் திருவிழாவாக இந்திய பைக் வீக் திருவிழாவை கூறலாம். வரும் 17ந் தேதி கோவாவில் 2014 இந்திய பைக் வீக் திருவிழா துவங்க உள்ளது. இதில், அரிதான, விலையுயர்ந்த பைக் மாடல்களை காணும் வாய்ப்பு இந்திய பைக் ரசிகர்களுக்கு கிடைக்க இருக்கிறது.

 

இந்த ஆண்டு இந்திய பைக் வீக் திருவிழாவில் புதிய ஹார்லி டேவிட்சனின் ஸ்ட்ரீட் 750 பைக் முதல்முறையாக இந்தியர்களின் கண்களுக்கு விருந்து படைக்க உள்ளது. மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் மாடல் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் புத்தம் புதிய ஸ்ட்ரீட் 750 பைக் மாடல். இந்தியாவிலேயே தயாரித்து விற்பனை செய்யப்பட உள்ள இந்த பைக் விலை குறைவாகவும் வர இருப்பதால் ஆவலை தூண்டியுள்ளது.

முதல்முறையாக

முதல்முறையாக

கடந்த ஆண்டு இத்தாலியின் மிலன் நகரில் நடந்த மோட்டார்சைக்கிள் திருவிழாவில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் ஸ்ட்ரீட் 750 மற்றும் ஸ்ட்ரீட் 500 என்ற 2 புதிய பைக் மாடல்களை அறிமுகம் செய்தது. அதில், முதலாவதாக, ஸ்ட்ரீட் 750 பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய பைக்கில் 749சிசி வி ட்வின் லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதனை புரட்சிகர எக்ஸ் எஞ்சின் குறிப்பிடும் ஹார்லி டேவிட்சன், இது லிக்யூடு கூல்டு எஞ்சினாக இருந்தாலும், இதன் சப்தம் ஏர் கூல்டு எஞ்சின் போன்று இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த பைக்கில் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது.

 கருப்பழகன்
 

கருப்பழகன்

இந்த பைக்கின் எஞ்சின், ஃபோர்க்குகள், எக்சாஸ்ட் என பெரும்பாலான பாகங்கள் கருப்பு வண்ண பூச்சு கொண்டது. மேலும், இதன் இருக்கைக்கு பின்புற டிசைன் கஃபே ரேஸர் போன்ற தோற்றம் கொண்டுள்ளது. ஹார்லி டேவிட்சன் பைக்கில் முதல்முறையாக இதுபோன்ற டிசைன் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் முன்புறத்தில் 71 இஞ்ச் சக்கரங்களும், பின்புறத்தில் 15 இஞ்ச் சக்கரங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு சக்கரங்களின் டிஸ்க் பிரேக்கிலும் சிங்கிள் காலிபர்களை கொண்டுள்ளன.

 புதிய மாடல்

புதிய மாடல்

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் புத்தம் புதிய மாடல்தான் ஸ்ட்ரீட் 750. இந்த புதிய பைக் மாடல் ஹரியானா மாநிலம், பவால் ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. உள்நாட்டு தேவையை நிறைவு செய்வதோடு, இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. அமெரிக்காவிலுள்ள ஆலையிலும் இந்த புதிய பைக் தயாரிக்கப்படும்.

விலை

விலை

இந்தியாவில் இந்த புதிய பைக் ரூ.5 லட்சத்திற்கும் குறைவான விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, ஆன்ரோடு விலை ரூ.5 லட்சத்திற்கும் மிகாமல் இருக்குமாறு விலை நிர்ணயிக்க ஹார்லி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் விலை உள்ளிட்ட அறிவிப்புடன் முறைப்படி விற்பனைக்கு வர இருக்கிறது.

கவரேஜ்

கவரேஜ்

இந்திய பைக் வீக் திருவிழாவில் காட்சிக்கு வைக்கப்பட இருக்கும் இந்த புதிய ஹார்லி டேவிட்சன் பைக்கின் பிரத்யேக படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை நேரடியாக வழங்க இருக்கிறோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Most Read Articles
 
Story first published: Monday, January 13, 2014, 12:02 [IST]
English summary
The India Bike Week 2014, at present India's only motorcycle festival, starts on Jan 17. Among other things one special event to look forward to at this edition of IBW is the unveiling of the Harley Davidson Street 750 for the first time in India.
Please Wait while comments are loading...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X