அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் ஹீரோ ஹைபிரிட் ஸ்கூட்டர்!

By Saravana

அடுத்த ஆண்டு இந்தியாவில் ஹீரோவின் முதல் ஹைபிரிட் ஸ்கூட்டர் லீப் விற்பனைக்கு வர இருக்கிறது. கடந்த 2012ம் ஆண்டு நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் மாடலாக லீப் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஹீரோ லீப் ஹைபிரிட் ஸ்கூட்டர் தயாரிப்பு நிலையை எட்டிவிட்டது. இதைத்தொடர்ந்து, குர்கானில் உள்ள ஹீரோ ஆலையில் லீப் ஹைபிரிட் ஸ்கூட்டரின் உற்பத்தி விரைவில் துவங்க இருக்கிறது.


ஹைபிரிட் மாடல்

ஹைபிரிட் மாடல்

லீப் பெட்ரோல் ஹைபிரிட் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருக்கும் 124சிசி பெட்ரோல் எஞ்சின் 11 பிஎஸ் பவரை அளிக்கும். இதுதவிர, லித்தியம் அயான் பேட்டரியில் இயங்கும் மின் மோட்டாரும் இணைந்து செயல்படும்.

 அதிக மைலேஜ்

அதிக மைலேஜ்

அதிகபட்சமாக மணிக்கு 100 கிமீ வேகம் வரை செல்லத்தக்க பலத்துடன் வருகிறது. இது அதிக எரிபொருள் சிக்கனம் கொண்டதாக இருக்கும் என்பதோடு, குறைவான வெளியிடும் தன்மை கொண்டதாக வருவதால் சுற்றுச்சூழலுக்கு நண்பன் என்ற அடைமொழியுடன் வருகிறது.

விற்பனை எப்போது?

விற்பனை எப்போது?

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற வளர்ந்த மார்க்கெட்டுகளில் இந்த புதிய ஹைபிரிட் ஸ்கூட்டரை முதலில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய ஹைபிரிட் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

விற்பனை இலக்கு

விற்பனை இலக்கு

லீப் ஹைபிரிட் ஸ்கூட்டரை பெரிய அளவில் தயாரித்து விற்பனை செய்ய ஹீரோ திட்டமிடமில்லை. மாதத்துக்கு 6,000 என்ற எண்ணிக்கையில் இந்த ஹைபிரிட் ஸ்கூட்டரை உற்பத்தி செய்து விற்பனைக்கு கொண்டு செல்கிறது. மேலும், தேவைக்கேற்ப இந்த ஸ்கூட்டரை உற்பத்தி செய்து கொள்ளவும் ஹீரோ முடிவு செய்துள்ளது.

Most Read Articles
English summary
Hero MotoCorp is growing by leaps and bounds, they have set their sights on international markets and are dominating the domestic market. They recently announced they would set a manufacturing facility in Brazil. They will also be venturing into hybrid scooters, which it had showcased as a concept during the 2012 Auto Expo in India.
Story first published: Monday, June 23, 2014, 17:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X