அதிக சக்தி, ஏராளமான வசதிகளுடன் வருகிறது ஹீரோ எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ்!

By Saravana

இருசக்கர வாகன மார்க்கெட்டில் தலைமைத்துவத்தை தக்கவைக்கும் விதத்தில் புதிய மாடல்களை தொடர்ந்து வரிசை கட்டி வருகிறது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம். அனைத்து பைக்குகளும் மாற்றங்கள் கண்டுவிட்டன. அந்த வகையில், கடந்த ஏப்ரலில் மேம்படுத்தப்பட்ட எக்ஸ்ட்ரீம் 150சிசி பைக்கை விற்பனைக்கு கொண்டு வந்தது.

டிசைனில் மாற்றங்களுடன் வந்த அந்த பைக் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்த நிலையில், கூடுதல் அம்சங்கள் கொண்டதாக எக்ஸ்ட்ரீம் பைக்கின் புதிய வேரியண்ட்டை விரைவில் ஷோரூமுக்கு அனுப்புகிறது ஹீரோ மோட்டோகார்ப். ஆம், எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய பைக் அதிக சக்தி கொண்டதாகவும், கூடுதல் வசதிகளுடன் வருகை தருகிறது.


கூடுதல் பவர்

கூடுதல் பவர்

சிபிஇசட் எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட் என்ற பெயரில் வரும் இந்த புதிய மாடலில் ஸ்டான்டர்டு மாடலில் இருக்கும் அதே 149.2சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 15.2 எச்பி பவரையும், 12.8 என்எம் டார்க்கையும் அளிக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாக இருக்கும். இது எக்ஸ்ட்ரீம் பைக்கைவிட கூடுதல் சக்தி கொண்டதாக வருகிறது. இந்த பைக்கின் சில முக்கிய அம்சங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

 டிஸ்க் பிரேக்குகள்

டிஸ்க் பிரேக்குகள்

முன்புறம் மற்றும் பின்புறத்தில் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டிருக்கும். பின்புற டயரின் அளவும் கூட்டப்பட்டிருப்பதால் அதிக கம்பீரமாகவு்ம், கூடுதல் நிலைத்தன்மையை வழங்கும்.

 எஞ்சின் இம்மொபைலைசர்

எஞ்சின் இம்மொபைலைசர்

எக்ஸ்ட்ரீம் பைக்கில் இருக்கும் சைடு ஸ்டான்ட் எச்சரிக்கை வசதியுடன், எஞ்சின் இம்மொபைலைசர் வசதிகள் இந்த வெர்ஷனிலும் இடம்பெற்றிருக்கும்.

மொபைல் சார்ஜர்

மொபைல் சார்ஜர்

புதிய எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் பைக்கின் இருக்கைக்கு கீழே மொபைல் சார்ஜ் செய்யும் வசதி உண்டு. இதுதவிர, ஸ்பெஷல் ஸ்டிக்கருடன் அதிக கவர்ச்சி கொண்டதாக வருகிறது. ரியர் வியூ கண்ணாடிகளின் பின்புறத்தில் இரட்டை வண்ணம் கொடுக்கப்பட்டிருக்கும்.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

எல்இடி ஹெட்லைட்டுகள், புதிய இன்டிகேட்டர்கள், நீல வண்ண பின்னணியுடன் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் போன்றவை கூடுதல் சிறப்பம்சங்களாக இருக்கும். விலை விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை. பஜாஜ் பல்சர் 150 மற்றும் யமஹா எஃப்இசட் பைக்குகளுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
Hero has recently launched its latest avatar of the CBZ Xtreme in April, 2014. Now the Indian manufacturer will be launching a CBZ Xtreme Sports version, which by it names suggests it will pack more power than the standard model.
Story first published: Monday, June 16, 2014, 9:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X