ஸ்நாப்டீல் தளத்தில் ஹீரோ பைக்குகள் விற்பனை!

By Saravana

ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் மோகம் அதிகரித்து வருகிறது. இருந்த இடத்திலிருந்து ஆர்டர் செய்து, எளிமையான நடைமுறைகள் மற்றும் ஆஃபர்களுடன் ஆன்லைனில் பொருட்கள் வாங்க முடிவதால் வாடிக்கையாளர்களுடன் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதனை மனதில் வைத்து அனைத்து நிறுவனங்களும் ஆன்லைன் வர்த்தகத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. இதற்கு ஆட்டோமொபைல் துறையும் விதிவிலக்கு அல்ல. மஹிந்திரா நிறுவனம் தனது ஸ்கார்ப்பியோ எஸ்யூவி, ரோடியோ ஸ்கூட்டர், செஞ்சூரோ மோட்டார்சைக்கிளை ஸ்நாப்டீல் தளத்தில் விற்பனை செய்கிறது.

Hero Bike

ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமும் ஸ்நாப்டீல் தளத்தின் மூலமாக விற்பனை செய்து வருகிறது. இந்த வரிசையில், தற்போது நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் இடம்பிடிக்கிறது. சமீபத்தில் நடந்த கூகுள் ஆன்லைன் ஷாப்பிங் திருவிழாவில் 700 பைக்குகளை ஹீரோ ஸ்நாப்டீல் தளத்தின் மூலமாக விற்பனை செய்துள்ளது.

இதையடுத்து, ஆன்லைனில் பைக் விற்பனையை துவங்க முடிவு செய்திருக்கிறது. இதற்காக, ஸ்நாப்டீல் நிறுவனத்துடன் அந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. பேஷன் புரோ, ஸ்பிளென்டர் ப்ளஸ், கரிஸ்மா, இக்னைட்டர் ஆகிய பைக்குகளை ஸ்நாப்டீல் தளத்தின் மூலமாக விற்பனை செய்யப்பட உள்ளது.

பணம் செலுத்துதல் நடைமுறைகள் ஆன்லைன் மூலமாக நடைபெறும். பின்னர் அருகிலுள்ள டீலர் வழியாக பைக்கை டெலிவிரி பெற்றுக் கொள்ளலாம். டீலர் வழியாக பைக்கிற்கான ஆவணங்கள் வழங்கப்படும். ஆன்லைனில் கிரெடிட் கார்டு மூலமாக பணம் செலுத்த முடியும் என்பதோடு, அதில் மாதத் தவணை திட்டத்தையும் வாடிக்கையாளர்கள் பெற ஏதுவாக இருக்கும்.

எனவே, இது வாடிக்கையாளர்களுக்கு பலன் தரும் திட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இது சோதனை முயற்சியாக ஆன்லைன் விற்பனையை செய்ய இருப்பதாகவும், வெற்றிபெறும் பட்சத்தில் ஆன்லைன் விற்பனை திட்டத்தை விரிவுப்படுத்தப்படும் என்று ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Hero MotoCorp - Snapdeal, have signed a deal to sell two-wheelers online soon.
Story first published: Thursday, December 18, 2014, 9:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X