அடுத்த மாதம் ஹீரோவின் முதல் ஸ்போர்ட்ஸ் பைக் ரிலீஸ்?!

அடுத்த மாதம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் என்ட்ரி லெவல் ஸ்போர்ட்ஸ் பைக்கான எச்எக்ஸ்250ஆர் பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அமெரிக்காவில் நடந்து வரும் சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் இந்த புதிய பைக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஹீரோ நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் அமெரிக்காவின் எரிக் புயெல் சூப்பர் பைக் தயாரிப்பு நிறுவனம் அமைத்திருக்கும் கண்காட்சி அரங்கில்தான் இந்த பைக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஹீரோ எச்எக்ஸ்250ஆர் பைக் அடுத்த மாதம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


முதல் ஸ்போர்ட்ஸ் மாடல்

முதல் ஸ்போர்ட்ஸ் மாடல்

ஹீரோ எச்எக்ஸ்250ஆர் பைக் என்ட்ரி லெவல் ஸ்போர்ட்ஸ் பைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சக்திவாய்ந்த மோட்டார்சைக்கிள் மாடலாகவும் வருகிறது. இது ஃபுல் ஃபேர்டு வெர்ஷன் டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 டிசைன்

டிசைன்

இரட்டை ஹெட்லைட்டுகள், இருக்கைக்கு கீழே எக்சாஸ்ட் குழாய் அமைப்பு போன்றவை குறிப்பிட்டு கூற முடியும்.

எஞ்சின் விபரம்

எஞ்சின் விபரம்

இந்த பைக்கில் 31 பிஎஸ் பவரையும், 26 என்எம் டார்க்கையும் அளிக்கும் 249சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைந்து செயல்படும். மேலும், ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக்குடன் ஒப்பிடும்போது, இது 6 பிஎஸ் பவரை கூடுதலாக வெளிப்படுத்தும் என்பதோடு, மொத்த எடை 28 கிலோ வரை குறைவு.

 இரண்டு டிரைவிங் ஆப்ஷன்கள்

இரண்டு டிரைவிங் ஆப்ஷன்கள்

பவர் மற்றும் எகானமி என்ற இரண்டு வித டிரைவிங் ஆப்ஷன்களில் ஓட்ட முடியும். ஏனெனில், ஹீரோ வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் மைலேஜை விரும்புபவர்களாக இருப்பதால் இதனை இரண்டு வித டிரைவிங் ஆப்ஷன்களை கொடுத்துள்ளனர்.

எடை

எடை

இந்த பைக் 138 கிலோ எடை கொண்டதாக இருப்பதால் சிறப்பான மைலேஜை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

விலை

விலை

ரூ.1.5 லட்சம் முதல் ரூ.1.8 லட்சம் வரையிலான விலையில் இந்த புதிய பைக் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 ஏற்றுமதி

ஏற்றுமதி

இந்த புதிய பைக் மாடல் இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Images: motorcycle.com

Most Read Articles
English summary
According to reports, Hero Motocorp is all set to launch HX250 entry level sports bike by November 2014 in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X