இந்தோனேஷியாவில் ட்வின் ஹெட்லைட்டுடன் வந்த புதிய ஹோண்டா சிபிஆர் 250ஆர்

இந்தோனேஷியாவில் ட்வின் ஹெட்லைட் கொண்ட புதிய ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக் கூடுதல் மைலேஜ் தரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எஞ்சின் ஆற்றலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடல் 26 எச்பி பவரை அளிக்கும் திறன்கொண்டதாக இருந்தது. தற்போது 29 எச்பி பவரை அளிக்கம் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டதாக வந்துள்ளது.

New Honda CBR 250R

ஏபிஎஸ் பிரேக் மற்றும் ஏபிஎஸ் பிரேக் இல்லாத மாடல்களில் அங்கு விற்பனைக்கு கிடைக்கும். 60 கிமீ வேகத்தில் பிரத்யேக சோதனை நிலைகளில் லிட்டருக்கு 50.1 கிமீ வரை மைலேஜ் கொடுப்பதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.

இந்தோனேஷியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக்கின் பேஸ் மாடல் இந்திய மதிப்பில் ரூ.2.53 லட்சம் முதல் ரூ.3.08 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த புதிய சிபிஆர்250ஆர் பைக் விற்பனைக்கு கொண்டு வரப்படுமா அல்லது சிபிஆர் 300 பைக் மாற்றாக வருமா என்பது குறித்து இதுவரை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் உறுதியாக எதையும் தெரிவிக்கவில்லை.

Most Read Articles
English summary
PT Astra Honda Motor (Honda Indonesia) launched a facelift of the CBR250R yesterday.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X