பண்டிகை காலத்தில் புதிய ஹோண்டா சிபிஆர் 300ஆர் வருவது உறுதி!

By Saravana

250சிசி பைக் மார்க்கெட்டில் விற்பனையில் முன்னிலையில் இருப்பது ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக். ஆனால், அந்த பைக்கில் வண்ணங்களை மட்டுமே அவ்வப்போது ஹோண்டா மாற்றி வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், இரட்டை ஹெட்லைட் கொண்ட சிபிஆர் 250ஆர் பைக் சமீபத்தில் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இருப்பினும், இந்தியாவில் அந்த புதிய மாடல் வருமா என்பது குறித்து உறுதி செய்யப்படாமல் இருந்து வந்தது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கூட காட்சிக்கு வைக்கப்படவில்லை. இந்த நிலையில், வரும் பண்டிகை காலத்தில் புதிய ஹோண்டா சிபிஆர் 300ஆர் பைக் வருவது எமது நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் மூலம் உறுதியாகியுள்ளது.


 சிறப்பம்சங்கள் விபரம்

சிறப்பம்சங்கள் விபரம்

புதிய ஹோண்டா சிபிஆர் 300ஆர் பைக்கின் சிறப்பம்சங்கள் மற்றும் படங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் வழங்கியுள்ளோம்.

தோற்றம்

தோற்றம்

புதிய ஹோண்டா சிபிஆர் 300ஆர் பைக்கின் மிக முக்கியமான அம்சமே அதன் இரட்டை ஹெட்லைட்டுகள்தான். இதனால், சிபிஆர்250ஆர் பைக்கைவிட சிறப்பான முக அழகை புதிய ஹோண்டா சிபிஆர் 300ஆர் கொண்டுள்ளது.

 எஞ்சின்

எஞ்சின்

புதிய ஹோண்டா சிபிஆர் 300ஆர் பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 286 சிசி எஞ்சின் 30 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

எடை குறைவு

எடை குறைவு

தற்போது விற்பனையில் இருக்கும் ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக்கைவிட புதிய சிபிஆர்300ஆர் பைக் எடை குறைவானதாக இருக்கும்.

விலை

விலை

ரூ.3 லட்சத்திற்குள்ளான விலையில் புதிய ஹோண்டா சிபிஆர் 300ஆர் விற்பனைக்கு வரும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி

போட்டி

விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் கேடிஎம் ஆர்சி390, யமஹா ஒய்இசட்எஃப் ஆர்25 மற்றும் மஹிந்திரா மோஜோ பைக்குகளுக்கு இது போட்டியை கொடுக்கும்.

Most Read Articles
English summary
We expected Honda to showcase their CBR300R at the 2014 Auto Expo which, was held in New Delhi. However, they did not showcase the bike and instead their CBR650F along with the prototype CX-01 was present at the Japanese automobile stand.
Story first published: Thursday, May 22, 2014, 15:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X