இந்தியாவிலிருந்து ஸ்டன்னர் பைக்கை விலக்கிக் கொள்ள ஹோண்டா முடிவு

By Saravana

இந்திய மார்க்கெட்டிலிருந்து ஹோண்டா ஸ்டன்னர் பைக்கின் விற்பனை நிறுத்தப்பட உள்ளது.

இந்தியாவில் அனைத்து ரகங்களிலும் ஹோண்டா நிறுவனம் பைக்குகளையும், ஸ்கூட்டர்களையும் நிலைநிறுத்தியுள்ளது. அதில், ஹோண்டாவின் செமி ஃபேர்டு வெர்ஷன் மாடலான ஸ்டன்னர் பைக் இளைஞர்களின் மனம் கவர்ந்த மாடலாக விளங்குகிறது.

Honda Stunner

இந்த பைக்கில் 11எச்பி பவரை அளிக்கும் 125சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டது. இந்த பைக்கின் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் எஞ்சின் கொண்ட மாடலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதுதவிர, பெரிய அளவிலான மாறுதல்கள் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், விற்பனையில் ஸ்டன்னர் படுமோசமாக இருந்து வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் ஒரு பைக்கிற்கு கூட முன்பதிவு இல்லை என்று டீலர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, இந்த பைக்கின் விற்பனையை இந்தியாவிலிருந்து விலக்கிக் கொள்ள ஹோண்டா இருசக்கர வாகன நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த பைக்கின் வழக்கமான தயாரிப்பும் நிறுத்தப்பட்டுவிட்டது. டேஸ்லரை தொடர்ந்து ஸ்டன்னர் விற்பனையும் இந்தியாவில் நிறுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Now Honda has stopped the regular production of its CBF Stunner due to poor demand. They are contemplating completely phasing out the product in India. The Japanese manufacturer has not taken the motorcycle off its website and will clear its stock before they announce the end of its semi-faired motorcycle. 
Story first published: Saturday, August 16, 2014, 10:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X