40 ஆண்டு பாரம்பரியம்... ஹோண்டா கோல்டுவிங் பைக்கின் ஸ்பெஷல் எடிசன்!

By Saravana

அறிமுகம் செய்யப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், 2015 ஹோண்டா கோல்டுவிங் மோட்டார்சைக்கிளின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பாரம்பரியம் மிக்க மாடலாக வலம் வரும் இந்த ஹோண்டா டூரர் ரக பைக் பைக் பிரியர்களின் கனவாக விளங்குகிறது. இந்தநிலையில், ஹோண்டா கோல்டுவிங் பைக்கின் 40வது ஆண்டு சிறப்பு பதிப்பு மாடலின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

பாரம்பரியம் மிக்க மாடல் 1

பாரம்பரியம் மிக்க மாடல் 1

1975ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த டூரர் ரக பைக் வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதுவரை 6.40 லட்சம் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

டிசைன்

டிசைன்

பிக் டாடி செல்லமாக அழைக்கப்படும் இந்த பைக்கின் டிசைன் பல டூரர் ரக பைக்குகளுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது. சிறப்பான இருக்கை அமைப்பு, சக்திவாய்ந்த எஞ்சின், பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கான பெட்டிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் கலக்கலாக இருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

ஹோண்டா கோல்டுவிங் பைக்கில் 87 பிஎச்பி பவரை அளிக்கும் 1832சிசி 6 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

 வண்ணங்கள்

வண்ணங்கள்

மூன்று விதமான இரட்டை வண்ணக் கலவையில் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 க்ரூஸ் கன்ட்ரோல்

க்ரூஸ் கன்ட்ரோல்

2015 ஹோண்டா கோல்டுவிங் எஃப்6பி மாடலில் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டமும் உள்ளது.

விலை

விலை

அமெரிக்காவில் 23,999 டாலர் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
The Honda Goldwing is four decades old next year and to celebrate the Japanese marque will release a 40th anniversary model.
Story first published: Friday, September 5, 2014, 14:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X