ஹோண்டாவின் மில்லியன் கனவை நனவாக்கிய ட்ரீம் மோட்டார்சைக்கிள்கள்!

By Saravana

விற்பனையில் ஹோண்டா ட்ரீம் வரிசை பைக்குகள் ஒரு மில்லியன் என்ற மாபெரும் விற்பனையை பதிவு செய்துள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு மத்தியில் ட்ரீம் வரிசையில் முதலாவதாக ட்ரீம் யுகா பைக்கை ஹோண்டா அறிமுகம் செய்தது. அந்த வரிசையில் ட்ரீம் யுகா, ட்ரீம் நியோ, சிடி 110 ட்ரீம் என தொடர்ந்து புதிய மாடல்களை களமிறக்கி வருகிறது.

Honda CD110 Dream

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கும், பட்ஜெட்டிற்கும் தகுந்தாற்போல் தேர்வு செய்து கொள்ளும் வகையில் இந்த பைக்குகள் சரியான விலையில், அதிக சிறப்பம்சங்களுடன் கிடைக்கின்றன. ஆனால், இவை அனைத்திலும் ஒரே எஞ்சின்தான் செயல்புரிகின்றன.

இந்த நிலையில், விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது முதல் ட்ரீம் வரிசையில் இதுவரை 10 லட்சம் மோட்டார்சைக்கிள்களை ஹோண்டா விற்பனை செய்து அசத்தியுள்ளது. இந்த பைக்குகளில் 8.25 எச்பி பவரையும், 8.63 என்எம் டார்க்கையும் அளிக்கும் 110சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

ரூ.40,750 முதல் ரூ.49,155 வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் ஹோண்டாவின் ட்ரீம் வரிசை பைக் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நம்பர்- 1 இடத்துக்கு முன்னேறுவதையே லட்சியமாக கொண்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஹோண்டாவுக்கு ட்ரீம் வரிசை பைக்குகள் மிக முக்கிய பங்களிப்பை அளித்து வருகின்றன.

Most Read Articles
English summary
Honda had launched its Dream range of motorcycles in India back in 2012. It is targeted at the mass market in the commuter segment in the country. The Japanese manufacturer has now achieved sales of 10,00,000 Dream motorcycles since it was launched, an amazing feat within a period of two years.
Story first published: Saturday, August 9, 2014, 16:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X