இந்தியாவில் புதிய இருசக்கர வாகன ஆலையை அமைக்கும் ஹோண்டா!

By Saravana

இந்தியாவில் மிக வேகமான வளர்ச்சியை ஹோண்டா இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் பதிவு செய்து வருகிறது. மேலும், இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக மாற வேண்டும் என்ற லட்சிய வேட்கையோடு முதலீடுகளையும், திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், தனது தயாரிப்புகளுக்கான தேவையை கருத்தில்கொண்டு புதிய இருசக்கர வாகன ஆலையை இந்தியாவில் அமைப்பதற்கு ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Honda Bike

குஜராத் மாநிலம், விதால்பூர் தாலுக்காவில் இந்த புதிய இருசக்கர வாகன தயாரிப்பு ஆலையை ஹோண்டா கட்ட உள்ளது. ரூ.1,100 கோடி முதலீட்டில் இந்த புதிய இருசக்கர வாகன ஆலை அமைக்கப்பட உள்ளதாக ஹோண்டா தெரிவித்துள்ளது. இது ஆண்டுக்கு 1.2 மில்லியன் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும்.

இந்த புதிய ஆலை மூலம் 2,000 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் ஹோண்டாவின் 4வது இருசக்கர வாகன தயாரிப்பு ஆலையாக இது அமைக்கிறது. ஏற்கனவே, ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடக மாநிலங்களில் ஹோண்டா நிறுவனம் இருசக்கர வாகன ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.

Most Read Articles
English summary

 The demand for Honda two wheelers is extremely high in India and naturally there is a long waiting period before getting your vehicle. To cope with the current demands they will be investing INR 1,100 crore in a new facility to be built in Gujarat.
Story first published: Wednesday, October 1, 2014, 10:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X