இந்தியர்களுக்கு ஆவலை ஏற்படுத்தும் ஹோண்டாவின் புதிய 125சிசி பைக்...!

By Saravana

ஐரோப்பிய மார்க்கெட்டுக்கான புதிய 125சிசி பைக் மாடலை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஹோண்டா சிபி125எஃப் என்ற பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய மாடல், ஹோண்டா டிரிக்கர் 150 மோட்டார்சைக்கிளின் அடிப்படையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

சிறந்த செயல்திறன் மற்றும் அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்க வல்லதாக இந்த மோட்டார்சைக்கிளை ஐரோப்பிய மார்க்கெட்டிற்கு ஹோண்டா கொண்டு செல்கிறது. இது அங்கு சிறப்பான விற்பனையை பதிவு செய்யுமா என்ற கேள்வியுடன், இந்த பைக்கின் படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


டிசைன்

டிசைன்

ஹோண்டா டிரிக்கர் 150 மோட்டார்சைக்கிளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய 125சிசி பைக் நவீன டிசைன் அம்சங்களை நிரம்பவே பெற்றிருக்கிறது. ஐரோப்பிய மார்க்கெட்டில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஹோண்டா சிபி300எஃப் மற்றும் சிபி500எஃப் வரிசையில் மிக குறைவான விலை கொண்ட மாடலாகவும், நேக்டு ஸ்டைல் பைக்காகவும் இருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த மோட்டார்சைக்கிளில் புதிய 124.7சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 10.5 எச்பி பவரையும், 11.35என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

மைலேஜ்

மைலேஜ்

லிட்டருக்கு 42.69கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 13லிட்டர் பெட்ரோல் டேங்க் உள்ளது. ஒருமுறை முழுமையாக நிரப்பினால், 595கிமீ தூரம் பயணிக்க முடியும் என்று ஹோண்டா தெரிவிக்கிறது.

 அதிர்வுகள் குறைவு

அதிர்வுகள் குறைவு

இந்த புதிய பைக் மாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சேஸீ மற்றும் பேலன்சர் சாஃப்ட் உள்ளிட்டவை மூலம் அதிர்வுகள் மிக குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 18 இஞ்ச் 6 ஸ்போக்ஸ் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்தியாவுக்கு வருமா?

இந்தியாவுக்கு வருமா?

இந்த புதிய பைக் ஐரோப்பிய மார்க்கெட்டில் முதலில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் என்று ஹோண்டா தெரிவித்துள்ளது. விலை உள்ளிட்ட விபரங்கள் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தினத்தில் அறிவிக்கப்படும். இந்த புதிய 125சிசி பைக் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளதால், அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Most Read Articles
English summary

 Honda CB125F is a naked bike and draws inspiration from India's CB Trigger model. It will join the CB range with CB300F and CB500F models in Europe. The Japanese manufacturer has redesigned their commuter motorcycle for a more modern appeal.
Story first published: Monday, November 24, 2014, 9:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X