இந்திய டிசைனர்களின் கைவண்ணததில் உருவான ஹயோசங் பவர் க்ரூஸர் கான்செப்ட்

தென்கொரியாவை சேர்ந்த ஹயோசங் பைக் தயாரிப்பு நிறுவனம் புதிய கான்செப்ட் பைக்கின் ஸ்கெ்ட்ச் படங்களை வெளியிட்டிருக்கிறது. ஹயோசங் நிறுவனத்தின் இந்திய பார்ட்னரா டிஎஸ்கே குழுமத்தின் அங்கமாக செயல்படும் புனேயிலுள்ள டிஎஸ்கே சர்வதேச டிசைன் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் குழு இந்த பைக் கான்செப்ட்டை உருவாக்கி அசத்தியுள்ளனர்.

நம் நாட்டு மார்க்கெட்டில் இருக்கும் ஹயோசங் எஸ்டி7 க்ரூஸர் பைக்கின் அடிப்படையிலேயே இந்த புதிய பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பார்ப்பதற்கு டுகாட்டி டயாவெல் பைக்கை போன்றே இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதையெல்லாம் தாண்டி, பார்ப்பவர்களை ஒரு கணம் நின்று பார்க்க வைக்கும் விதத்திலேயே கான்செப்ட்டின் ஸ்கெட்ச்சை உருவாக்கி கொடுத்துள்ளனர்.


பவர் க்ரூஸர் பைக்

பவர் க்ரூஸர் பைக்

ஸ்போர்ட்ஸ் பைக்குகள் போன்று சிறப்பான பவரையும், க்ரூஸர் பைக் போன்ற சொகுசையும் ஒருங்கே வழங்கும் பவர் க்ரூஸர் என்ற ரகத்தில் இந்த பைக் வருகிறது.

எஞ்சின்

எஞ்சின்

நம் நாட்டில் விற்பனையில் இருக்கும் ஹயோசங் எஸ்டி7 க்ரூஸர் பைக்கில் இருக்கும் அதே 678 சிசி வி ட்வின் எஞ்சின்தான் இந்த பைக்கிலும் பொருத்தப்பட உள்ளது. எஸ்டி7 எஞ்சின் 62 எச்பி பவரையும், 57 என்எம் டார்க்கையும் வழங்கும் நிலையில், எஸ்டி7 பவர் க்ரூஸர் மாடல் கூடுதல் பவர் கொண்டதாக இருக்கும்.

பெரிய பைக்

பெரிய பைக்

பிற ஹயோசங் பைக் மாடல்களை ஒப்பிடும்போது, இது உருவத்தில் பெரிதாக தெரிகிறது. எஞ்சின் கார்டு போன்றவை மிக தாழ்வாக இருப்பது போன்று டிசைன் செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பு நிலை மாடலிலும் இதே டிசைன் அம்சங்கள் இருக்குமா என்பது தெரியாது. ஆனால், பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது என்றே தகவல்கள் கூறுகின்றன.

அறிமுகம்

அறிமுகம்

வரும் நவம்பரில் இத்தாலியில் நடைபெற உள்ள மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் இந்த ஸ்கெட்சுகளின் அடிப்படையில் உருவாக்கப்படும் புதிய பைக் கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Most Read Articles
English summary
South Korean motorcycle manufacturer Hyosung has revealed sketches of a motorcycle concept which it will reveal at this year's EICMA show in Milan, Italy, which will be held in November.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X