ஐபிஎல் போன்று ஐஎம்எல்... இளம் பைக் பந்தய வீரர்களுக்கான புதிய களம்!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை போன்று இளம் பைக் பந்தய வீரர்களுக்கான இந்திய மோட்டார்சைக்கிள் லீக்(IML) அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. கோவை, சென்னை, டெல்லி ஆகிய இடங்களில் முதலாமாண்டு போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கான, அணிகள் மற்றும் வீரர்கள் தேர்வு கடந்த 1 மற்றும் 2ஆம் தேதிகளில் கோவையிலுள்ள கரி ஸ்பீடுவே மோட்டார்ஸ்போர்ட்ஸ் களத்தில் நடந்தது. இதில், தேர்வு பெற்று பந்தயத்தில் கலந்து கொள்ள இருக்கும் அணிகள் மற்றும் அதன் வீரர்களின் அறிமுகம் சென்னையில் நேற்று நடந்தது.

முதலாமாண்டு போட்டியில் தலா 5 வீரர்களை கொண்ட 8 அணிகள் பலப் பரீட்சையில் இறங்க உள்ளன. இந்த போட்டிகளுக்கான முக்கிய ஸ்பான்சரான டிவிஎஸ் ரேஸிங் அமைப்பு போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும் அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக்குகளை வழங்க உள்ளது.

அணி மற்றும் வீரர்கள் உள்ளிட்ட கூடுதல் விபரங்கள், படங்கள் ஸ்லைடரில் கொடுக்கப்பட்டுள்ளன.

பங்கேற்கும் அணிகள்

பங்கேற்கும் அணிகள்

டீம் பெங்களூர் புல்லட், டீம் சென்னை கிராக்கர்ஸ், டீம் கொச்சி, டீம் டெல்லி டிராகோன்ஸ், டீம் ஹைதராபாத் ஹை ரைடர்ஸ், டீம் கோவை, டீம் மும்பை டான்ஸ், டீம் புனே பாந்தர்ஸ் ஆகிய 8 அணிகள் முதலாவது இந்தியன் மோட்டார்சைக்கிள் லீக் போட்டியில் பங்கேற்க உள்ளன. படத்தில் ஐஎம்எல் அமைப்பின் தலைவர் ரஷீத்கான், டிவிஎஸ் ரேஸிங் அணியின் ஆலோசகர் மற்றும் அணியின் உரிமையாளர்கள் உள்ளனர்.

கிரேடு ஏ வீரர்கள்

கிரேடு ஏ வீரர்கள்

கிரேடு ஏ வீரர்களாக தேர்வு பெற்றவர்கள்.

கிரேடு பி வீரர்கள்

கிரேடு பி வீரர்கள்

படத்தில் கிரேடு பி வீரர்கள்.

 கிரேடு சி வீரர்கள்

கிரேடு சி வீரர்கள்

படத்தில் ஐஎம்எல் போட்டியின் கிரேடு சி வீரர்கள் உள்ளனர்.

 பயிற்சியாளர்கள்

பயிற்சியாளர்கள்

ஐஎம்எல் கிளாஸ் அணிகளின் பயிற்சியாளர்கள் உள்ளனர்.

ஐஎம்எல் தலைவர்

ஐஎம்எல் தலைவர்

ஐஎம்எல் அமைப்பின் தலைவர் ரஷீத்கான் உள்ளார்.

கோவை அணி

கோவை அணி

உரிமையாளர்: ஸ்ரீகுமார் கோபிநாதன்

பயிற்சியாளர்: தேவகுமார்

வீரர்கள்: ஹாரி சில்வெஸ்டர், மதனகுமார், விவேக் மணி, சந்தேஷ் பிரசன்னா, ஆனந்த் குமார்.

சென்னை அணி

சென்னை அணி

உரிமையாளர்: அஷ்வின் சுந்தர்

பயிற்சியாளர்: செந்தில்நாத்

வீரர்கள்: ஜெகன், பிரகாஷ், கண்ணன், ஆகாஷ் தேசாய், பாலாஜி.

பெங்களூர் அணி

பெங்களூர் அணி

உரிமையாளர்: ரோஹித் கிரி

பயிற்சியாளர்: இம்மானுவேல் ஜெபராஜ்

வீரர்கள்: நரேஷ் பாபு, அருண் முத்துகிருஷ்ணன், பார்திவ் செல்வராஜ், ராஜிவ், ஆனந்த் ராஜ்.

கொச்சி அணி

கொச்சி அணி

உரிமையாளர்: ஸ்ரீகுமார் கோபிநாதன்

பயிற்சியாளர்: பி.கார்த்திக்

வீரர்கள்: தினேஷ் குமார், லால் ரின்திகா, ஹர்ஷித் ராவ், தாமரைகண்ணன், வம்ஷி கிருஷ்ணா.

டெல்லி அணி

டெல்லி அணி

உரிமையாளர்: திலீப் ரோஜர்

பயிற்சியாளர்: இம்மானுவேல் கிளார்க்

வீரர்கள்: ஷியாம் சங்கர், பத்மநாபன், சதீஷ்குமார், சரவணன், தீபன்சு பாந்த்வல்

ஹைதராபாத் அணி

ஹைதராபாத் அணி

உரிமையாளர்: அர்மான்

பயிற்சியாளர்: விஸ்வநாத்

வீரர்கள்: விவேக் பிள்ளை, ரமேஷ் குமார், அகமது, நவீன் ராஜ், முரளி.

மும்பை அணி

மும்பை அணி

உரிமையாளர்: ஷீபா ஹூசைன்

பயிற்சியாளர்: கந்தராஜா

வீரர்கள்: தீபக், விதுராஜ் மேகா, சுனில் கோபி, அப்துல் வஹாப், கார்த்திக்

புனே அணி

புனே அணி

உரிமையாளர்: அன்சார் அகமது

பயிற்சியாளர்: அப்துல்லா

வீரர்கள்: ரஜினி, அபிஷேக் வாசுதேவ், அர்விந்த் கணேஷ், ஆகாஷ் சந்திர மோகன், மிதுன் குமார்

துவக்கம்

துவக்கம்

முதலாம் ஆண்டாக துவங்க இருக்கும் ஐஎம்எல் பைக் பந்தயத்தின் பயிற்சி பந்தயங்கள் இந்த மாத இறுதியில் கோவையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு

தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு

இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த புதிய போட்டியின் மூலம் ஏராளமான தமிழக பைக் பந்தய வீரர்கள் அடையாளம் காணப்படும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏனெனில், பெரும்பான்மையான அணிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த செய்தியை ஃபேஸ்புக் மூலமாக பகிர்ந்து கொள்ள விரும்புபவர்கள் இங்கே கிளிக் செய்யவும்.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X