சொகுசு அம்சங்களுடன் 2015 இந்தியன் ரோட்மாஸ்டர் மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

அமெரிக்காவை சேர்ந்த இந்தியன் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் நேரடியாக கால் பதித்து வர்த்தகத்தை துவங்கிவிட்டது. இந்தியாவில் சீஃப் விண்டேஜ், சீஃப் கிளாசிக், சீஃப்டெயின் மற்றும் ரோட்மாஸ்டர் உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியன் ரோட்மாஸ்டர் டூரர் ரக மோட்டார்சைக்கிளின் புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிச்சயம் இந்தியா வர இருக்கும் இந்த புதிய மாடல் சிறிய டிசைன் மாற்றத்துடன் வருகை தர இருக்கிறது. இந்த புதிய மோட்டார்சைக்கிளில் இடம்பெற்றிருக்கும் கூடுதல் அம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.


கூடுதல் தகவல்கள்

கூடுதல் தகவல்கள்

நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற இந்த புதிய டூரர் ரக மோட்டார்சைக்கிளில் இடம்பெற்றிருக்கும் சொகுசு அம்சங்கள் விபரங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த மோட்டார்சைக்கிளில் 1811சிசி தண்டர்ஸ்ட்ரோக் III வி- ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 138.9 என்எம் டார்க்கை அளிக்க வல்லது.

எல்இடி ஹெட்லைட்

எல்இடி ஹெட்லைட்

இந்த மோட்டார்சைக்கிளின் ஹெட்லைட், டர்ன் இண்டிகேட்டர், டெயில்லைட்டுகள், பனி விளக்குகள் ஆகிய அனைத்தும் எல்இடி விளக்குகள் கொண்டது.

ஸ்டோரேஜ்

ஸ்டோரேஜ்

65.1 லிட்டர் கொள்ளளவு கொண்ட சேடில் பேக்குகளும், 64.4 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரங்க் பெட்டியும் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர, 9.0 லிட்டர் கொள்ளளவு கொண்ட கிளவ் பாக்ஸ் உள்ளது. இவை ரிமோட் லாக் வசதி கொண்டவை.

வைன்ட்ஷீல்டு

வைன்ட்ஷீல்டு

சீதோஷ்ண நிலைக்கு தக்கவாறு அட்ஜெஸ்ட் செய்யும் வசதி கொண்ட வைன்ட்ஷீல்டு கொடுக்கப்பட்டுள்ளது. கைப்பிடிகளை வெப்ப மூட்டும் வசதியும் உண்டு. இதேபோன்று, கால் வைப்பதற்கான ஃப்ளோர் போர்டையும் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம்.

புஷ் பட்டன் ஸ்டார்ட்

புஷ் பட்டன் ஸ்டார்ட்

இந்த பைக்கில் புஷ் பட்டன் ஸ்டார் வசதி உள்ளது. பாக்கெட்டில் சாவி இருந்தால், ஒரு பட்டனை அழுத்தி மோட்டார்சைக்கிளை ஸ்டார்ட் செய்து விடலாம்.

 லெதர் இருக்கைகள்

லெதர் இருக்கைகள்

நீடித்து உழைக்கும் மிக உயர் தரத்திலான டேன் லெதர் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், பின்புற பயணிகள் கைகளை வைத்துக்கொள்வதற்கு லெதர் வேலைப்பாடு பொருந்திய ஆர்ம்ரெஸ்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதர வசதிகள்

இதர வசதிகள்

டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் க்ரூஸ் கன்ட்ரோல், நேவிகேஷன் உள்ளடக்கிய நவீன இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புளூடூத் வசதி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

இந்தியாவுக்கு எப்போது?

இந்தியாவுக்கு எப்போது?

வரும் செப்டம்பர் முதல் வட அமெரிக்க மார்க்கெட்டில் டெலிவிரி கொடுக்கப்பட உள்ளது. இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த உறுதியானத் தகவல்கள் இல்லை. அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் களமிறக்கப்படலாம். அமெரிக்காவில் 26,999 டாலர் விலை மதிப்பில், அதாவது இந்திய மதிப்பில் ரூ.16.23 லட்சம் விலையில் விற்பனைக்கு வருகிறது. அதேவேளை, இந்தியா வரும்போது இறக்குமதி வரியை சேர்க்கும்போது ரூ.30 லட்சத்திற்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Indian Motorcycles are popular for the road presence and cannot be mistaken for any other motorcycle. The American brand has revealed its 2015 version of its Roadmaster and it is certainly coming to India. The touring motorcycle will retain its big and bold presence with a slight design change.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X