அடுத்து 2 உயர்ரக பைக்குகளை களமிறக்க கவாஸாகி திட்டம்

By Saravana

அடுத்து 2 புதிய உயர்ரக பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு கவாஸாகி திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு நின்ஜா இசட்எக்ஸ்14ஆர் மற்றும் நின்ஜா இசட்எக்ஸ்10ஆர் பைக்குகளை கவாஸாகி விற்பனைக்கு விட்டது.

இதைத்தொடர்ந்து, இசட்1000 மற்றும் நின்ஜா 1000 பைக்குகளையும் இறக்கிவிட்டது. இந்த மாதத்திற்குள் இசட்800 பைக்கையும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது கவாஸாகி.

இந்தநிலையில், அடுத்ததாக 2 புதிய பைக் மாடல்களை கவாஸாகி விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது. வெர்சிஸ் 1000 என்ற ஸ்போர்ட் டூரர் பைக்கையும், நின்ஜா 650 பைக்கின் நேக்டு வெர்ஷன் மாடலான இஆர்6என் என்ற புதிய பைக் மாடலையும் இந்தியாவில் இந்த ஆண்டு அறிமுகம் செய்ய கவாஸாகி திட்டமிட்டுள்ளது.

Kawasaki ER 6n

கவாஸாகி வெர்சிஸ் ஸ்போர்ட்ஸ் டூரர் பைக்கில் 1,043 சிசி திறன் கொண்ட 4 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 118 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் சக்தி கொண்டது.

இதேபோன்று, கவாஸாகி இஆர்6என் நேக்டு ஸ்டைல் பைக்கில் 649சிசி ட்வின் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 72 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் சக்தி கொண்டதாக இருக்கும். இந்த ஆண்டு மத்தியில் இரு பைக் மாடல்களும் விற்பனைக்கு வரலாம்.

Most Read Articles
English summary
The Japanese manufacturer will be showcasing its adventure bike the Versys 1000. Along with the ER-6n, which is the naked version of the Ninja 650, available in India.
Story first published: Thursday, January 2, 2014, 17:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X