விரைவில் இந்தியா வரும் கவாஸாகியின் புதிய ஹைப்பர் பைக் எச்2!

அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் புதிய கவாஸாகி நின்ஜா எச்2 ஹைப்பர் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெர்மனியின் இன்டர்மோட் மற்றும் இத்தாலியின் இஐசிஎம்ஏ ஆகிய மோட்டார்சைக்கிள் கண்காட்சிகள் மூலம் பொது தரிசனம் கொடுத்த இந்த புதிய மோட்டார்சைக்கிள் உலகின் மிகச்சிறந்த ஆக்சிலரேஷன் கொண்ட ஹைப்பர் பைக்காக குறிப்பிடப்படுகிறது. இந்த பைக்கின் ரேஸ் மாடல் எச்2ஆர் என்றும், சாதாரண சாலைகளுக்கான மாடல் எச்2 என்ற பெயரிலும் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தநிலையில், கவாஸாகி நின்ஜா எச்2 ஸ்ட்ரீட் மாடல் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


 டிசைன்

டிசைன்

கவாஸாகியின் பிரபலமான நின்ஜா இசட்எக்ஸ்-14ஆர் சூப்பர் பைக்கிற்கு மாற்றாக இந்த புதிய சூப்பர்ஸ்போர்ட் ரக பைக் அறிமுகம் செய்யப்பட உள்ளது.கவாஸாகி நிறுவனத்தின் ஏரோஸ்பேஸ் பிரிவின் ஒத்துழைப்புடன் இப்புதிய பைக்கின் பாடி டிசைன் செய்யப்பட்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

கவாஸாகி நின்ஜா எச்2 பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 999சிசி எஞ்சின் 203 பிஎச்பி பவரையும், 140.4 என்.எம் டார்க்கை அளிக்கும் 4 சிலிண்டர் லிக்யூடு கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது. அதிகபட்சமாக மணிக்கு 300 கிமீ வேகத்தில் செல்லும்.

 குயிக்ஷிப்டர் வசதி

குயிக்ஷிப்டர் வசதி

இந்த பைக்கின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று குயிக்ஷிஃப்டர் வசதி. பெரும்பாலும் ரேஸ் பைக்குகளில் தரப்படும் இந்த குயிக்ஷிஃப்டர் வசதி மூலம், கியரை மாற்றுவதற்கு கிளட்ச் மற்றும் ஆக்சிலேட்டரை தொடாமல் நேரடியாக மாற்றமுடியும்.

சிறந்த ரைடிங் பொஷிசன்

சிறந்த ரைடிங் பொஷிசன்

இந்த பைக் கவாஸாகியின் இசெட்.எக்ஸ் 10ஆர் பைக்கைவிட சிறப்பான ரைடிங் பொசிஷன் கொண்டிருக்கும் என்று கவாஸாகி தெரிவித்துள்ளது.

 டிராக்ஷன் கன்ட்ரோல்

டிராக்ஷன் கன்ட்ரோல்

மூன்றுவிதமாக மாற்றிக்கொள்ளும் வசதியுடன்கூடிய டிராக்க்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளது. ஒன்று டிராக்கில் பயன்படுத்தும் விதமாகவும், இரண்டாவது சாதாரண சாலைகளுக்கானதாகவும் மற்றொன்று ஈரப்பதமான சாலைகளில் செல்வதற்கானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை

விலை

கவாஸாகி நின்ஜா எச்2 மற்றும் எச்2ஆர் பைக் மாடல்கள் லிமிடேட் எடிசன் மாடல்கள் என்றும், முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படும் என்றும் கவாஸாகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் இடையிலான விலைப் பட்டியலில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு முக்கியத்துவம்

இந்தியாவுக்கு முக்கியத்துவம்

கடந்த காலங்களில் வெளிநாடுகளில் அறிமுகமாகும் விலையுயர்ந்த கார் மற்றும் பைக்குகள் உடனடியாக இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு நிறுவனங்கள் ஆர்வம் காட்டாது. ஆனால், தற்போது விலையுயர்ந்த கார் மற்றும் பைக் மாடல்களை உடனடியாக அறிமுகம் செய்வதில் அனைத்து நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன. இதன்மூலம், இந்திய மார்க்கெட்டின் வளர்ச்சியையும், ஸ்திரத்தன்மையையும் உணர்த்துவதாக உள்ளது.

Most Read Articles
English summary
Japanese two-wheeler manufacturer, Kawasaki recently launched its flagship motorcycle. The H2 and H2R were official unveiled at 2014 INTERMOT, it was recently showcased to public at 2014 EICMA motor show. Both bikes boast of enormous power figures and gizmos.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X