ஒற்றை சிலிண்டர் எஞ்சினுடன் கவாஸாகியின் புதிய 250சிசி பைக் அறிமுகம்!

By Saravana

சிங்கிள் சிலிண்டர் 250சிசி எஞ்சின் கொண்ட பைக் மார்க்கெட்டில் ஹோண்டா முன்னிலை வகிக்கிறது. ஆனால், பெரும்பாலான போட்டி நிறுவனங்கள் இரட்டை சிலிண்டர் 250சிசி எஞ்சின் கொண்ட பைக்குகளை விற்பனை செய்து வருகின்றன.

இந்த நிலையில், ஹோண்டா தயாரிப்புகளுக்கு போட்டியை கொடுக்கும் விதத்தில் புதிய சிங்கிள் சிலிண்டர் 250சிசி பைக்கை கவாஸாகி இந்தோனேஷியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்தியாவிலும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த புதிய பைக் மாடலின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

செய்தியின் தொடர்ச்சியை ஸ்லைடரில் படிக்கலாம்!

இசட் வரிசை

இசட் வரிசை

இசட் வரிசையில் வந்திருக்கும் இந்த புதிய பைக் நேக்டு ஸ்டைல் டிசைனில் ஸ்ட்ரீட் பைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இசட் வரிசையில் கவாஸாகி பைக்குகளின் டிசைன் தாத்பரியங்கள் எடுத்து டிசைன் செய்யப்பட்டிருக்கிறது.வாடிக்கையாளர்களை நிச்சயம் கவரும் விதத்தில் தோற்றத்தை கொண்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய பைக்கில் 27.6 பிஎச்பி பவரையும், 23 என்எம் டார்க்கையும் அளிக்கும் 250சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இணைந்து செயலாற்றுகிறது.

 ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம்

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம்

இந்த பைக்கில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் கொண்ட மாடலும் விற்பனைக்கு வந்துள்ளது.

விலை

விலை

பேஸ் மாடல் இந்திய மதிப்பில் ரூ.2.03 லட்சம் விலையிலும், ஏபிஎஸ் பிரேக் கொண்ட மாடல் ரூ.2.34 லட்சம் விலையிலும் இந்தோனேஷியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்தியா வந்தால்...?

இந்தியா வந்தால்...?

இரட்டை சிலிண்டர் எஞ்சினைவிட ஒற்றை சிலிண்டர் எஞ்சின் கொண்ட பைக்கின் விலை மிக குறைவாக நிர்ணயிக்க முடியும். எனவே, இந்தியாவில் இந்த புதிய பைக் மாடலை கவாஸாகி விற்பனைக்கு கொண்டு வந்தால், கேடிஎம் டியூக் 200 மற்றும் ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக்குகளுக்கு நேரடி போட்டியை கொடுக்கும்.

Most Read Articles
English summary
Honda has dominated the single cylinder 250cc segment from the day it was launched. It faced competition from other manufacturers however, they all had two cylinders. Thus, they could not be considered as competition. Now Kawasaki has launched it's single cylinder 250cc naked bike called the Z250SL.
Story first published: Saturday, May 3, 2014, 13:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X