புனே அராய் சோதனை மையத்தில் கவாஸாகி இசட்250 பைக்: விரைவில் அறிமுகமாகிறது!

By Saravana

புனே அராய் சோதனை மையத்தில் புதிய கவாஸாகி இசட்250 பைக்கின் ஹோமோலோகேஷன் பணிகள் நடந்து வருகின்றன. எனவே, விரைவில் இந்திய மார்க்கெட்டில் இந்த புதிய நேக்டு ஸ்டைல் பைக் அறிமுகமாக இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வந்த இசட்800 பைக்கின் டிசைன் ஸ்டைலுடன், நின்ஜா 250ஆர் ஸ்ட்ரீட் பைக்கின் நேக்டு மாடல்தான் இது. மேலும், நின்ஜா 300 பைக்கின் பல பாகங்களை இந்த பைக்கும் பங்கிட்டு கொள்கிறது.


தோற்றம்

தோற்றம்

தோற்றத்தில் இசட்800 பைக்குக்கும், இசட்250 பைக்குக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை. முகப்பு டிசைன்கூட கிட்டத்தட்ட அப்படியே ஒத்திருக்கிறது. ஸ்பிளிட் இருக்கைகள், இசட் வடிவிலான எஞ்சின் கவர் போன்றவை வேறுபடுத்துகின்றன. இந்த பைக்கின் தோற்றம் இளைஞர்களை பெரிதும் கவரும்.

 இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

அனலாக் மற்றும் டிஜிட்டல் மீட்டர்களுடன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் அமைக்கப்பட்டுள்ளது.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த பைக்கில் 33.5 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் பேரலல் ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டு உள்ளது. அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும் ட்யூவல் த்ரோட்டில் வால்வ் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது. இதில், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது.

 டிஸ்க் பிரேக்

டிஸ்க் பிரேக்

இருசக்கரங்களிலும் சிங்கிள் பெட்டல் டிஸ்க் பிரேக்குகள் இருப்பது பாதுகாப்பை உறுதி செய்வதாக இருக்கும். பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் உள்ளது.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் வர இருக்கும் இந்த புதிய பைக் ரூ.3 லட்சத்திற்குள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary

 Kawasaki has brought its most affordable product, the Z250 naked street bike, to India for homologation process at ARAI in Pune, ZigWheels has learnt. The Z250 should be ready for launch before the end of the year once testing is finished.
Story first published: Thursday, May 29, 2014, 16:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X