டியூக் 390 பைக்கை திரும்ப அழைத்த கேடிஎம் நிறுவனம்!

செயின் ஸ்பிராக்கெட்டில் இருக்கும் பிரச்னையை சரிசெய்து தருவதற்காக இந்தியாவில் கேடிஎம் டியூக் 390 பைக்குகள் திரும்ப அழைத்துள்ளது.

முன்புற செயின் ஸ்பிராக்கெட்டில் இருக்கும் லாக்கிங் பிளேட்டில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை சரிசெய்து தருவதற்கே இந்த திரும்ப பெறும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

KTM Duke 390

லாக்கிங் பிளேட்டை சரியாக பொருத்தி தரப்படும், அப்படி சரியாகாதபட்சத்தில் லாக்கிங் பிளேட் இலவசமாக மாற்றித் தரப்படும் என்று கேடிஎம் தெரிவித்துள்ளது. டியூக் 390 பைக் உரிமையாளர்கள் தங்களது பைக்கை அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களுக்கு கொண்டு வந்து பிரச்னையை சரி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த பிரச்னையை சரிசெய்து தருவதற்கு ஒரு பைக்கிற்கு அரை மணி நேரம் பிடிக்கும். பிரச்னை சரிசெய்யப்படவில்லையெனில், செயின் கழலும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதத்திற்கு முன்னர் தயாரிப்பு தேதி கொண்ட பைக்குகளில் மட்டுமே இந்த பிரச்னை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் தயாரிக்கப்பட்ட பைக்குகளில் பிரச்னை சரிசெய்யப்பட்டுவிட்டது.

இதற்கு முன் எஞ்சின் அதிக சூடாவதை காரணம் காட்டி இதுபோன்றே டியூக் 390 பைக்கை கேடிஎம் திரும்ப அழைத்தது நினைவிருக்கலாம்.

Most Read Articles
English summary
KTM has issued a recall for its flagship 390 Duke model in India. The recall is due to a defective front sprocket locking plate. KTM 390 Duke owners have been asked to bring their motorcycles to service centres where it will be checked for any faults and if found, the component will be repositioned or changed.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X