டியூக் 390 வாடிக்கையாளர்களுக்கு புதுமையான அனுபவம்: அதான் கேடிஎம்!

இதுவரை எந்தவொரு பைக் நிறுவனமும் வழங்காத புதுமையான அனுபவத்தை கேடிஎம் டியூக்390 பைக் வாடிக்கையாளர்களுக்கு சமீபத்தில் கிடைத்தது.டெல்லி அருகே நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் ஃபார்முலா- 1 சர்க்யூட்டில், தங்களது டியூக் 390 பைக்கை ஓட்டி பார்ப்பதற்கான மிகச்சிறந்த வாய்ப்பை அந்த நிறுவனம் வழங்கியது.

சாதாரண சாலைகளில் தங்களது பைக்கின் முழு செயல்திறனையும் பார்க்க முடியாத வாடிக்கையாளர்களுக்கு, இந்த நிகழ்ச்சி மூலம் த்ரில்லான அனுபவத்தை பெற்றனர். இது வாடிக்கையாளர்களுக்கு ஒரு திருப்திகரமான நிகழ்வாக அமைந்தது. அதுபற்றிய கூடுதல் தகவல்கள்.

வாடிக்கையாளர் ஆர்வம்

வாடிக்கையாளர் ஆர்வம்

நாடு முழுவதும் இருந்து 100க்கும் அதிகமான கேடிஎம் டியூக் 390 பைக்கின் உரிமையாளர்கள் இந்த நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கெடுத்தனர். தங்களது பைக் மற்றும் அதற்கான விசேஷ உடைகளுடன் அவர்கள் அங்கு ஆஜராகினர்.

 டிராக் டே!

டிராக் டே!

ஆரஞ்ச் டே என்ற பெயரில் இதுவரை கேடிஎம் பைக் உரிமையாளர்களுக்கான பைக் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், முதல்முறையாக டெல்லி புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் கேடிஎம் டியூக் 390 பைக் உரிமையாளர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் விதத்தில், இந்த "டிராக் டே" எனப்படும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

 ஆலோசனை

ஆலோசனை

பந்தய களத்தில் ஓட்டுவதற்கு பதிவு செய்த கேடிஎம் டியூக் 390 பைக்கின் உரிமையாளர்களுக்கு பயிற்சியாளர்கள் சிறப்பு ஆலோசனைகளை வழங்கினர். பந்தய களத்தில் எவ்வாறு பைக்கை அதிவேகத்தில் ஓட்டுவது மற்றும் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை கொடுத்தனர்.

போட்டி

போட்டி

பந்தய களத்தில் இறங்கிய கேடிஎம் டியூக் 390 பைக்குகளில் நேரத்தை துல்லியமாக கணக்கிட உதவும் சாதனம் பொருத்தப்பட்டிருந்தது. இதன்மூலம், ஒவ்வொருவரும் எவ்வளவு நேரத்தில் பந்தய களத்தை சுற்றி வந்தனர் என்பதை அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது.

சிறந்த அனுபவம்

சிறந்த அனுபவம்

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல டியூக் 390 பைக் உரிமையாளர்கள் புத் பந்தய களத்தில் ஓட்டியது மிகச்சிறப்பான, மறக்க முடியாத அனுபவமாக குறிப்பிட்டனர். இதுபோன்ற ஒரு நிகழ்ச்சிக்கு கேடிஎம் நிறுவனம் மீண்டும் ஏற்பாடு செய்யும் என்றும் அவர்கள் தங்களது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினர்.

 கேடிஎம் டியூக் 390

கேடிஎம் டியூக் 390

கேடிஎம் டியூக் 200 பைக்கின் வெற்றியை தொடர்ந்து கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேடிஎம் பிராண்டின் 2வது பைக் மாடல் இது. இந்த பைக்கில் அதிகபட்சமாக 43 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 373சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

Most Read Articles
English summary
KTM has been organising race events like 'Orange Day' and many more activities out of India. Now for the first time, Austrian bike maker has given its 390 Duke Owners the opportunity to ride on Buddh International Circuit.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X