எஞ்சின் ரீமேப்பிங் வசதியை அறிமுகப்படுத்தும் கேடிஎம்

By Saravana

இந்திய இருசக்கர வாகன மார்க்கெட்டிலேயே முதல்முறையாக எஞ்சின் ரீமேப்பிங் வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருக்கிறது கேடிஎம் நிறுவனம். வசதிகேற்ப எஞ்சினை மாற்றிக் கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது மிக பயனுள்ளதாக இருக்கும்.

இதுவரை எந்தவொரு நிறுவனமும் எஞ்சின் ரீமேப் செய்யும் வசதியை வழங்கவில்லை. மேலும், சில கூடுதல் வசதிகளையும் வாடிக்கையாளர்களுக்கு கேடிஎம் அறிமுகம் செய்ய உள்ளது. இதுபற்றிய செய்தித் தொகுப்பை காணலாம்.

எஞ்சின் ரீமேப்

எஞ்சின் ரீமேப்

எஞ்சினில் எரிபொருளை எரிப்பதற்கும், ஆற்றலை வெளிப்படுத்துவதற்குமான கட்டுப்பாட்டு தகவல்கள் அடங்கிய இசியூ சாஃப்ட்வேர் மூலம் எஞ்சினில் மாற்றங்களை செய்ய முடியும். இந்த சாஃப்ட்வேரை அதிகாரப்பூர்வமாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய கேடிஎம் முடிவு செய்துள்ளது.

 இரண்டு சாஃப்ட்வேர்கள்

இரண்டு சாஃப்ட்வேர்கள்

இரு எஞ்சின் ரீமேப்பிங் சாஃப்ட்வேர்களை கேடிஎம் அறிமுகம் செய்ய உள்ளது. ஒன்று பெர்ஃபார்மென்ஸை கூட்டிக் கொள்ளும் வகையிலும், மற்றொன்று நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு ஏற்ற வகையிலும் இருக்கும். கேடிஎம் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் மையங்களில் இந்த புதிய எஞ்சின் ரீமேப்பிங் சாஃப்ட்வேர்களை வாங்கி மாற்றம் செய்து கொள்ளலாம். ஒரு நேரத்தில் ஒரு சாஃப்ட்வேரை மட்டுமே பயன்படுத்த முடியும்.

வாரண்டி பிரச்னை

வாரண்டி பிரச்னை

தற்போது பல கேடிஎம் பைக் உரிமையாளர்கள் வெளிச்சந்தையில் இதுபோன்ற எஞ்சின் ரீமேப்பிங் சாஃப்ட்வேர்களை பயன்படுத்துகின்றனர். இதனால், வாரண்டி பிரச்னை ஏற்படும் நிலை இருக்கிறது. ஆனால், கேடிஎம் வழங்கும் எஞ்சின் ரீமேப்பிங் சாஃப்ட்வேர் மூலம் வாரண்டி பிரச்னை வராது. மேலும், பல கட்ட சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டிருப்பதால், எஞ்சினிலும் பிரச்னைகள் ஏற்படாது என்று தெரிவிக்கப்படுகிறது.

 புதிய மாடல்

புதிய மாடல்

தற்போது விற்பனையில் இருக்கும் டியூக் மாடல் பைக்குகள் தவிர, இந்திய மார்க்கெட்டிற்கு வர இருக்கும் ஆர்சி மாடல் பைக்குகளுக்கும் இந்த எஞ்சின் ரீமேப்பிங் வசதியை வழங்க கேடிஎம் திட்டமிட்டுள்ளது.

 அவசர உதவி சேவை

அவசர உதவி சேவை

எஞ்சின் ரீமேப்பிங் தவிர்த்து இந்தியாவில் 24 மணிநேர சாலை அவரச உதவி திட்டத்தையும் அறிமுகப்படுத்த கேடிஎம் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
KTM will soon become the first manufacturer in India to offer its own engine maps to customers. Simply put, engine maps are a set of instructions that tell the engine how to burn fuel and how to deliver power. 
Story first published: Tuesday, April 29, 2014, 12:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X