மணிக்கு 179 கிமீ வேகத்தில் பறந்த கேடிஎம் ஆர்சி390...!!

புதிய கேடிஎம் ஆர்சி390 பைக் இந்தியாவில் நாளை விற்பனைக்கு வர இருக்கிறது. கேடிஎம் டியூக் வரிசை பைக்குகளை போன்றே இந்த புதிய மாடல்களும் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த புதிய பைக் மாடல்களை வாங்குவதற்கு இளைஞர் பட்டாளம் ஆவலுடன் காத்துக் கிடக்கிறது. இந்த நிலையில், கேடிஎம் ஆர்சி390 பைக் மணிக்கு 179 கிமீ வேகத்தில் பறந்து செல்லும் வீடியோ வெளியாகி அந்த ஆவலை அதிகரித்துள்ளது.

பறந்து சென்ற ஆர்சி390

பறந்து சென்ற ஆர்சி390

ஐரோப்பிய மார்க்கெட்டில் விற்பனையாகும் கேடிஎம் ஆர்சி390 பைக் மாடல் மணிக்கு 179 கிமீ வேகம் வரை தொட்டுள்ளது. அங்கு வேகக்கட்டுப்பாடு உள்ளது. ஆனால், இந்தியாவில் அப்படி ஏதும் கட்டுப்பாடுகள் இல்லை என்பதால் இந்திய மாடல் இதைவிட அதிக வேகம் டாப் ஸ்பீடு கொண்டதாக வரும் என கருதப்படுகிறது.

எஞ்சின்

எஞ்சின்

கேடிஎம் டியூக் 390 பைக்கில் இருக்கும் அதே எஞ்சின்தான். இதில் இருக்கும் 373சிசி எஞ்சின் அதிகபட்சமாக 43.38எச்பி பவரையும், 35 என்எம் டார்க்கையும் அளிக்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது.

விலை

விலை

கேடிஎம் டியூக் 390 நேக்டு பாடி ஸ்டைல் கொண்டது. அதன் ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்பட்ட ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக கேடிஎம் ஆர்சி390 வருகிறது. எனவே, டியூக் 390 பைக்கைவிட ரூ.40,000 கூடுதல் விலையில் இந்த புதிய ஆர்சி390பைக் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேடிஎம் ஆர்சி200

கேடிஎம் ஆர்சி200

கேடிஎம் ஆர்சி390 பைக்குடன், கேடிஎம் ஆர்சி200 பைக்கும் நாளை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இது கேடிஎம் டியூக் 200பைக்கைவிட ரூ.20,000 கூடுதல் விலை கொண்டதாக வரும் என தகவல்கள் கூறுகின்றன.

வீடியோ

மணிக்கு 179கிமீ வேகத்தில் பறந்த கேடிஎம் ஆர்சி390 பைக்.

Most Read Articles
English summary
Today we have a video of a RC 390 hitting its top speed in International markets. However, we believe the India spec motorcycle will be faster as there are no restrictions like in European countries. The motorcycle in our video hits a top speed of 179 km/h.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X