அடுத்த மாதம் 9ந் தேதி இந்தியாவில் கேடிஎம் ஆர்சி390 ரிலீஸ்!

By Saravana

கேடிஎம் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வரும் புதிய கேடிஎம் ஆர்சி390 பைக் வரும் செப்டம்பர் மாதம் 9ந் தேதி இந்தியாவில் பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த புதிய பைக்கை விற்பனைக்கு கொண்டு வருவது தொடர்பாக டீலர்களுடன் கேடிஎம் நிறுவனம் ஆலோசனை கூட்டத்தையும் நடத்தியுள்ளது.

அதேவேளை, இந்த பைக்குக்கு கேடிஎம் டீலர்களில் முன்பதிவு செய்யப்பட்டு வருவதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை. பைக் விற்பனைக்கு கொண்டு வரப்படும்போதுதான் முன்பதிவு துவங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கேடிஎம் டியூக் 390 பைக்கின் ஃபுல் ஃபேரிங் வெர்ஷனாக வரும் இந்த புதிய பைக்கின் சில முக்கிய அம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.


கூடுதல் தகவல்கள்

கூடுதல் தகவல்கள்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் கூடுதல் தகவல்களை காணலாம்.

எஞ்சின்

எஞ்சின்

கேடிஎம் டியூக் 390 பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் அதே சிங்கிள் சிலிண்டர் 373.3சிசி எஞ்சின்தான் இந்த புதிய மாடலிலும் இருக்கும். இது அதிகபட்சமாக 42.9 எச்பி பவரையும், அத்துடன் சேர்த்து 35 என்எம் டார்க்கையும் அளிக்கும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டதாக வருகிறது.

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்

ஜெர்மனியை சேர்ந்த மெட்ஸீலர் நிறுவனத்திடமிருந்து பெறப்படும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர அம்சமாக இருக்கும்.

டியூக் பாகங்கள்

டியூக் பாகங்கள்

நேக்டு வெர்ஷனில் விற்பனை செய்யப்பட்டும் வரும் கேடிஎம் டியூக் 390 பைக்கின் எஞ்சின், சஸ்பென்ஷன், இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோர்ல, டயர்கள் உள்ளிட்ட பல பாகங்களை இந்த புதிய மாடல் பகிர்ந்து கொண்டுள்ளது. அதேவேளை, கவர்ச்சியும், சீற்றமுமாக தெரியும் வகையில் ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்பட்டிருப்பதுடன், சேஸீயிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

போட்டி

போட்டி

விரைவில் இந்தியா வர இருக்கும் ஹோண்டா சிபிஆர் 300ஆர் மற்றும் யமஹா ஆர்25 ஆகிய பைக் மாடல்களுக்கு இது நேரடி போட்டியாக இருக்கும். தற்போதைய நிலையில் கவாஸாகி நின்ஜா 300 பைக்குடன் போட்டி போடும்.

விலை

விலை

ரூ.2 லட்சம் விலையில் இந்த புதிய பைக்கை நிலைநிறுத்த கேடிஎம் முடிவு செய்துள்ளது. மிகச்சரியான விலையில் வரும் ஓர் முழுமையான ஃபேரிங் பேனல்கள் கொண்ட பைக் மாடல் என்பதால் இளைய வாடிக்கையாளர் வட்டமும் ஆவலுடன் காத்துக் கிடக்கிறது.

அடுத்து ஆர்சி200

அடுத்து ஆர்சி200

கேடிஎம் ஆர்சி390 பைக்கை தொடர்ந்து கேடிஎம் டியூக் 200 பைக்கின் ஃபேர்டு வெர்ஷனான கேடிஎம் ஆர்சி200 பைக்கும் அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றனSmile.

Most Read Articles
English summary
KTM has teased all of us with its RC range of motorcycles for a while now. They launched the RC125 for European countries a few days ago. The Austrian manufacturer was rumoured to have a meeting with its dealers in India and now is expected to launch its RC390 in India on the 9th of September, 2014.
Story first published: Saturday, August 9, 2014, 14:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X