மின்னல்... உலகின் அதிவேக எலக்ட்ரிக் சூப்பர் பைக்!

By Saravana

அமெரிக்காவை சேர்ந்த லைட்னிங் என்ற நிறுவனம் புதிய எலக்ட்ரிக் சூப்பர் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இதுதான் உலகின் அதிவேக எலக்ட்ரிக் பைக் மாடல் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

லைட்னிங் எல்எஸ்- 218 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய எலக்ட்ரிக் சூப்பர் பைக் டிசைன் தற்போது உள்ள இதர சூப்பர் பைக் மாடல்களின் டிசைனை ஒத்திருக்கிறது.

Lightning Super Bike

புது மாதிரியாக டிசைனில் அதிக மாற்றங்கள் இல்லை. சைலென்சர், எக்சாஸ்ட் பைப் போன்றவை இல்லாமல் இதர சூப்பர் பைக் மாடல்களின் தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

200எச்பி பவரை அளிக்கும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும் இந்த பைக் சோதனையின் போது மணிக்கு 350.8கிமீ வேகத்தை தொட்டதாக லைட்னிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கார் ஆக்சஸெரீகள் மீது 20 சதவீத தள்ளுபடி!

இதில் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்யும்போது 160 கிமீ தூரம் வரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 38,000 டாலர் விலை கொண்ட இந்த எலக்ட்ரிக் சூப்பர் பைக்கின் டெலிவிரி துவங்கிவிட்டது. ஒரு பைக்கை டெலிவிரி கொடுத்துவிட்டதாகவும் லைட்னிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Lightning Motorcycles, a small start-up electric motorcycle manufacturer based in San Carlos, have claimed to made the fastest motorcycle in the world, the LS-281. The motorcycle is powered by an electric motor, capable of producing 200-horsepower, weighs around 495 lbs, and has attained a top speed of 218 miles per hour (350.8 km/h) while testing.
Story first published: Tuesday, November 18, 2014, 11:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X