அமெரிக்காவில் மட்டுமல்ல... இந்தியாவில் ஜென்ஸீயை அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டம்

அமெரிக்காவில் மஹிந்திராவின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவின் சான்டா மோனிகாவில் நடந்த 13வது மாற்று எரிபொருள் வாகன கண்காட்சியான அல்ட்கார் ஷோவில் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது.

ஒருவர் மட்டுமே பயணிக்கும் வசதி கொண்ட இந்த ஸ்கூட்டரை நகர்ப்புறத்துக்கு ஏற்ற வகையில் வடிவமைத்துள்ளனர்.இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டிசைன் மற்றும் இதர சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம். அமெரிக்காவில் மட்டும் தற்போது அறிமுகம் செய்யப்படும் என்று கூறினாலும், சீனா மற்றும் இந்தியாவிலும் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

டிசைன்

டிசைன்

சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைக்கும் வகையிலான இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எல்இடி ஹெட்லைட், மிக எளிமையான டிசைன் கொண்டதாக இருக்கிறது. ஒருவர் பயணிப்பதற்கான இருக்கையும், அதற்கு பின்புறம் பொருட்களை வைப்பதற்கான பக்கெட் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

பொருட்களுக்கு இடவசதி

பொருட்களுக்கு இடவசதி

அலுவலகம் செல்லும்போதும், ஷாப்பிங் செல்லும்போதும் எளிதாக பொருட்களை வைத்து எடுத்துச் செல்லும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இது நகர்ப்புறத்துக்கு ஏற்ற சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக இருக்கும்.

லேப்டாப் பெட்டகம்

லேப்டாப் பெட்டகம்

பக்கெட் தவிர்த்து இருக்கைக்கு கீழே லேப்டாப், ஸ்மார்ட்போனை வைத்து பாதுகாப்பாக எடுத்துச் செல்லவும், அதே நேரத்தில் சார்ஜ் செய்து கொள்ளும் வகையில் யுஎஸ்பி போர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இந்த ஸ்கூட்டரின் ஹேண்டில்பார் இடையில் 7 இஞ்ச் திரை ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. பேட்டரி சார்ஜ் விபரத்தையும், அதில் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். இது வாட்டர்புரூஃப் வசதி கொண்டது.வண்டியின் வேகத்தையும், ஸ்மார்ட்போனை இணைத்துக் கொள்ளும் வசதியுடன், ஜிபிஎஸ், நேவிகேஷன் வசதியையும் பெற முடியும். இந்த ஸ்கூட்டரில் ஸ்மார்ட்போன்களை யுஎஸ்பி போர்ட் மூலம் சார்ஜ் செய்யும் வசதியும் இருக்கிறது.

மின்மோட்டார்

மின்மோட்டார்

லித்தியம் அயான் பேட்டரியும், 1.4 kW மின் மோட்டாரும் பொருத்தப்பட்டிருக்கும்.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

இது அதிகபட்சமாக மணிக்கு 50 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் இருக்கும். ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்வளவு தூரம் செல்லும் என்பது குறித்த விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால், 50 கிமீ வரை செல்லும் என்று ஆட்டோமொபைல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விலை

விலை

இந்திய மதிப்பில் ரூ.1.80 லட்சம் விலையில் அமெரிக்காவில் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மஹிந்திரா விற்பனைக்கு விடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்காவில் தயாரிக்கப்படும் இந்த புதிய மஹிந்திரா ஸ்கூட்டர் கலிஃபோர்னியா, புளோரிடா, வர்ஜீனியா, ஒரேகான் ஆகிய மாகாணங்களில் நேரடியாக விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு...

இந்தியாவுக்கு...

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மானிய திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தினால், இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால் வரவேற்பை பெறுமா? உங்களது கருத்தையும் பதிவு செய்யுங்கள்.

Most Read Articles
English summary
Mahindra GenZe is an all-electric scooter which the company will launch in the United States by the middle of this year. First revealed in September in the States, the GenZe has been undergoing development in Palo Alto, California and is part of a global initiative to promote green vehicles.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X