செப்.29ல் ரிலீசாகிறது மஹிந்திராவின் புதிய 'குளோபல்' ஸ்கூட்டர் மாடல்!

By Saravana

சர்வதேச அளவில் தனது வர்த்தக சிறகுகளை விரிப்பதற்கான முயற்சிகளை மஹிந்திரா தீவிரப்படுத்தியிருக்கிறது. அதன்படியே, தனது புதிய மாடல்களை சர்வதேச அளவில் விற்பனைக்கு கொண்டு செல்லும் தரம் மற்றும் சிறப்பம்சங்களுடன் வடிவமைத்து வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், தற்போது உலக அளவில் விற்பனைக்கு கொண்டு செல்லும் அம்சங்களுடன் புதிய ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஜி101 என்ற குறியீட்டு பெயரில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய ஸ்கூட்டர் மாடலுக்கு கஸ்டோ என்று மஹிந்திரா பெயரிட்டிருக்கிறது.

வரும் 29ந் தேதி நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் முதலில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் இந்த புதிய ஸ்கூட்டர் மாடல் நேபாள நாட்டிலும் அன்றைய தினம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Gusto Logo

அண்டை நாடுகள் மட்டுமின்றி தெற்காசியா, லத்தீன் அமெரிக்க நாடுகள், ஆப்ரிக்க நாடுகளிலும் இன்னும் சில மாதங்களில் இந்த புதிய ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய ஸ்கூட்டரின் எஞ்சின் மற்றும் அதன் சிசி குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், வலுவான கிராங்சாஃப்ட் மற்றும் பேரிங்குகள் கொண்டதாகவும், அதிக திறன் கொண்ட எச்டி காயில் மற்றும் சீரிஸ் ரெகுலேட்டருடன் வர இருப்பதாக மஹிந்திரா வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Mahindra Two Wheelers Limited has announced that its much awaited global scooter, code named G101, will be called ‘GUSTO’. After rigorous testing and validation we are now ready to launch the GUSTO in the Northern and Western markets of India and Nepal, on September 29. We will launch in the Southern and Eastern markets of India as well as South Asia, Central America and Africa, in a few months.”
Story first published: Wednesday, September 24, 2014, 9:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X