பீஜோ ஸ்கூட்டர் நிறுவனத்தை கையகப்படுத்த மஹிந்திரா திட்டம்

By Saravana

பீஜோ ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கு மஹிந்திரா குழுமம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் மஹிந்திரா பல்வேறு ரகங்களில் வாகனங்களை தயாரிக்கிறது.

இருசக்கர வாகனப் பிரிவின் கீழ் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், சர்வதேச அளவில் தனது இருசக்கர வாகன வர்த்தகத்தை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும், இந்தியாவில் கோலோய்ச்சி வரும் வெளிநாட்டு இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களை எதிர்கொள்ளும் விதத்தில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் முனைப்பிலும் இருந்து வருகிறது.

Peugeot Scooter

இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான பீஜோவின் ஸ்கூட்டர் தயாரிப்பு பிரிவை கையக்கப்படுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், தொழில்நுட்ப பகிர்மானம், சர்வதேச வர்த்தக விரிவாக்க முயற்சிகளை எளிதாக நிறைவேற்ற முடியும் என நம்புகிறது.

மேலும், இந்தியாவிலும் பீஜோ ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்யவும் திட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
According to our source Mahindra & Mahindra is all set to buy Peugeot's scooter division. The acquisition will surely boost the Indian manufacturers presence in global markets. They will also benefit by sharing technology and innovations in their forthcoming products.
Story first published: Saturday, September 20, 2014, 17:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X