மங்களூர் தீயணைப்புப் படையில் புல்லட் மோட்டார்சைக்கிள்!

By Saravana

தீப்பிடித்த பகுதிகளுக்கு துரிதகதியில் செல்வதற்காக, புல்லட் மோட்டார்சைக்கிள்களை மங்களூர் தீயணைப்பப் படையினர் வாங்கியுள்ளனர். போக்குவரத்து நெரிசல் மற்றும் குறுகிய சாலைகள் கொண்ட பகுதிகளில் தீப்பிடிக்கும்போது பெரிய தீயணைப்பு வாகனங்கள் செல்வது கடினமாக உள்ளது.

இதனால், தீயணைப்புப் படையினர் சரியான நேரத்தில் உதவி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இதனைதவிர்த்து, விபத்து பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக சென்று முதலுதவி மற்றும் தீயணைப்பு சேவைகளை வழங்கும் விதத்தில் புல்லட் மோட்டார்சைக்கிள்களை அவர்கள் வாங்கியுள்ளனர்.


விலை மதிப்பு

விலை மதிப்பு

தீயணைப்பு படையினருக்கு தேவையான வசதிகளுடன் இந்த மோட்டார்சைக்கிள் கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு வண்டியாக மாற்றுவதற்கு ரூ.4.5 லட்சம் செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மொத்த மதிப்பு ரூ.6 லட்சம்.

உபகரணங்கள்

உபகரணங்கள்

முதலுதவி பெட்டி, எச்சரிக்கை விளக்கு, சைரன், ஆக்சிஜன் சிலிண்டர், தீயணைப்பு சிலிண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், தீயில் பாதிக்கப்பட்டவரை காப்பாற்றுவதற்காக கம்பளிகளும் உள்ளன.

தீயணைப்பு வசதி

தீயணைப்பு வசதி

தண்ணீர் மற்றும் நுரை கலவை கொண்ட உருளைகள் இந்த மினி தீயணைப்பு வண்டியில் பொருத்தப்பட்டிருக்கிறது.

மாடல்

மாடல்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புல்லட் எலக்ட்ரா மாடல்தான் தீயணைப்பு வாகனமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 19.8 எச்பி பவரையும், 28 என்எம் டார்க்கையும் அளிக்கும் 346சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

பிற நகரங்களிலும்...

பிற நகரங்களிலும்...

புனே, மங்களூர் நகரங்களை தொடர்ந்து பிற நகரங்களிலும் இந்த புல்லட் தீயணைப்பு வண்டி சேவை அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டணி

கூட்டணி

அக்சா என்ற தீயணைப்பு உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்துடன் இணைந்து இந்த வகை மோட்டார்சைக்கிள்களை தயாரிக்க ஏற்கனவே ராயல் என்ஃபீல்டு பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த நிறுவனத்தின் உதவியுடன் இந்த தீயணைப்பு மோட்டார்சைக்கிள்களை தயாரித்து உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருப்பதாக ஏற்கனவே ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தெரிவித்திருந்தது.

Most Read Articles
English summary
The Mangalore Fire Brigade has now purchased Royal Enfield Electra 350 Motorcycles to be used as mini fire engines. The fire brigade has modified the Electra to suit its requirements. Four slots for special tanks containing water and compressed air-foam have been added to the rear. 
Story first published: Thursday, October 23, 2014, 12:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X