மினி கார் நிறுவனத்தின் அசத்தலான புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!

By Saravana

தனிநபர் பயன்பாட்டுக்கு ஏற்ற அசத்தலான புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட்டை மினி கார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

Citysurfer என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் டிசைன் வெகுவாக கவர்வதாக உள்ளது. எங்கு வேண்டுமானாலும் எளிதாக எடுத்துச் சென்று பயன்படுத்தும் வசதி கொண்ட இந்த புதிய மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


பயன்பாடு

பயன்பாடு

அலுவலகம் மற்றும் கல்லூரி வளாகங்கள் மற்றும் நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்கும். இதில், இருக்கை இல்லாமல், ஸ்கேட் போர்டு போன்று நின்று கொண்டே செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி

இந்த ஸ்கூட்டரில் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. இதனை 12 வோல்ட் மின்திறன் கொண்ட சாக்கெட்டுகள் மூலமாக சார்ஜ் செய்ய முடியும்.

ரேஞ்ச்

ரேஞ்ச்

ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 15 கிமீ முதல் 25 கிமீ தூரம் வரை மினி சிட்டிசர்ஃபரில் பயணிக்க முடியும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பிரேக் ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றி சேமிக்கும் தொழில்நுட்பமும் உள்ளது.

வேகம்

வேகம்

அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தில் இந்த சிட்டிசர்ஃப்ர் செல்லும். ஷாப்பிங் செல்வது, அலுவலகம் செல்வதற்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

மடக்கி எடுத்துச் செல்லலாம்

மடக்கி எடுத்துச் செல்லலாம்

இந்த ஸ்கூட்டரை மடக்கி வைத்து எளிதாக எடுத்துச் செல்லலாம். இது 18 கிலோ மட்டுமே எடை கொண்டது. கார் பார்க்கிங்கிலிருந்து அலுவலகம் மற்றும் குறைந்த தூரம் செல்வதற்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

Most Read Articles
English summary
The Britain based manufacturer has showcased their two-wheeler concept to us. MINI have christened their concept as the ‘Citysurfer', which is an electric scooter. It is an ideal mobility option in the urban environment, and is an innovative concept for individual mobility.
Story first published: Friday, November 21, 2014, 15:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X