ஜெர்மனியில் புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

ஜெர்மனியில் நடந்து வரும் இன்டர்மோட் மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் ஸ்க்ராம்ப்ளர் என்ற புதிய பைக் மாடலை டுகாட்டி அறிமுகம் செய்துள்ளது.

1960 முதல் 1970கள் வரை டுகாட்டி தயாரித்த பைக் டிசைன்களின் அடிப்படையாகக் கொண்டு நவீன தொழில்நுட்பத்துடன் இந்த புதிய பைக் தயாரிக்கப்பட்டிருக்கிறது. டுகாட்டி ரசிகர்களின் மனதை வசீகரித்திருக்கும் இந்த புதிய பைக் மாடல் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


 மாடல்கள்

மாடல்கள்

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக் பல்வேறு மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கும். ஐகான், அர்பன், என்டியூரோ, கிளாசிக், ஃபுல் த்ராட்டில் ஆகிய மாடல்களில் வெளியிடப்பட்டிருக்கும். ஒவ்வொரு மாடலும் பிரத்யேக வண்ணம் மற்றும் சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

ஸ்க்ராம்ப்ளர் பைக்கில் 803சிசி எல்-ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது அதிகபட்சமாக 75 எச்பி பவரையும், 68 என்எம் டார்க்கையும் வழங்கும்.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

பழமையான டிசைனில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த பைக்கில் ஏராளமான சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த பைக் பிரேம்போ பிரேக் காலிபர்களுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக் அமைப்பை கொண்டுள்ளது. பின்புறத்தில் கயபா மோனோஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டிருக்கிறது.

விலை

விலை

டுகாட்டியின் குறைந்த விலை மாடல் என்பதால் அதிக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் ஐகான் மாடல் இந்திய மதிப்பில் ரூ.5.24 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. பிற மாடல்கள் அனைத்தும் ரூ.6,17,041 விலையில் விற்பனைக்கு வருகின்றன. அமெரிக்க சந்தையில் இந்த புதிய மாடல் விரைவில் விற்பனைக்கு செல்கிறது. இந்தியாவில் இந்த புதிய பைக் மாடல் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்த தகவல் இல்லை.

முன்னேற்றப் பாதையில் டுகாட்டி

முன்னேற்றப் பாதையில் டுகாட்டி

நஷ்டத்தில் இயங்கி வந்த இத்தாலியை சேர்ந்த டுகாட்டி பைக் நிறுவனத்தை கடந்த 2012ம் ஆண்டு ஃபோக்ஸ்வேகன் குழுமம் கையகப்படுத்தியது. இந்த நிலையில், கடந்த 12 மாதங்களின் விற்பனை நிலவரப்படி, 5 சதவீத வளர்ச்சியை டுகாட்டி நிறுவனம் பதிவு செய்துள்ளது. இந்த புதிய மாடல் விற்பனையில் முக்கிய பங்கை வழங்கும் என டுகாட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
There were various speculations and spy images of the Scrambler. However, Ducati has finally revealed its motorcycle to all in Germany. The Italian marked its unveil on another historic achievement, Ducati has won the 2014 German Superbike Championship.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X