மிகவும் அழகான பைக்காக டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் தேர்வு!

By Saravana

மிகவும் அழகான பைக் என்ற பெருமையை டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக் பெற்றுள்ளது. இத்தாலியில் நடந்த இஐசிஎம்ஏ ஆட்டோமொபைல் கண்காட்சிக்கு வருகை தந்த பார்வையாளர்கள் மிக அழகான பைக்காக டுகாட்டி ஸ்க்ராம்ப்ளருக்கு அதிக ஆதரவை தந்து தேர்வு செய்துள்ளனர்.

இஐசிஎம்ஏ ஆட்டோமொபைல் கண்காட்சியில் பல முன்னணி நிறுவனங்கள் பல புதிய மோட்டார்சைக்கிள்களை காட்சிக்கு வைத்திருந்தன. இந்தநிலையில், கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பைக்குகளில் மிக அழகான பைக்கை தேர்வு செய்வதற்காக வாக்களிப்பு முறையை மோட்டோசிகிளிஸ்மோ என்ற ஆட்டோமொபைல் இதழ் நடத்தியது.

இதில், கண்காட்சிக்கு வந்த 10,000க்கும் அதிகமான பார்வையாளர்கள் ஆர்வமுடன் பங்குகொண்டு வாக்களித்தனர். இதற்காக தரப்பட்ட விண்ணப்பத்தில் பிடித்த பைக்கை எழுதி அங்கிருந்த பெட்டியில் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில், ஆன்லைன் மூலமாகவும் ஓட்டளிக்க வசதி செய்யப்பட்டிருந்தது. இதில், கலந்து கொண்டவர்களில் 43 சதவீதத்தினர் மிகவும் அழகான பைக்காக டுகாட்டி ஸ்க்ராம்ப்ளருக்கு வாக்களித்தனர். இரண்டாம் இடத்தை பிடித்த பைக்கிற்கு 15 சதவீத வாக்குகளே கிடைத்தன.

கடந்த மாதம் ஜெர்மனியில் நடந்த இன்டர்மோட் என்ற ஆட்டோமொபைல் கண்காட்சியில்தான் இந்த புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக் அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்டைல் பழசு, மத்ததெல்லாம் புதுசு என்ற தலைப்பில் இந்த பைக்கை பற்றி ஏற்கனவே எழுதியிருந்தோம். இந்த பைக்கின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் நினைவுக்காக வழங்கியுள்ளோம்.


மாடல்கள்

மாடல்கள்

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக் பல்வேறு மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கும். ஐகான், அர்பன், என்டியூரோ, கிளாசிக், ஃபுல் த்ராட்டில் ஆகிய மாடல்களில் வெளியிடப்பட்டிருக்கும். ஒவ்வொரு மாடலும் பிரத்யேக வண்ணம் மற்றும் சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

ஸ்க்ராம்ப்ளர் பைக்கில் 803சிசி எல்-ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது அதிகபட்சமாக 75 எச்பி பவரையும், 68 என்எம் டார்க்கையும் வழங்கும்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

பழமையான டிசைனில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த பைக்கில் ஏராளமான சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த பைக் பிரேம்போ பிரேக் காலிபர்களுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக் அமைப்பை கொண்டுள்ளது. பின்புறத்தில் கயபா மோனோஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டிருக்கிறது.

விலை

விலை

டுகாட்டியின் குறைந்த விலை மாடல் என்பதால் அதிக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் ஐகான் மாடல் இந்திய மதிப்பில் ரூ.5.24 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. பிற மாடல்கள் அனைத்தும் ரூ.6,17,041 விலையில் விற்பனைக்கு வருகின்றன. அமெரிக்க சந்தையில் இந்த புதிய மாடல் விரைவில் விற்பனைக்கு செல்கிறது. இந்தியாவில் இந்த புதிய பைக் மாடல் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்த தகவல் இல்லை.

 முன்னேற்றப் பாதையில் டுகாட்டி

முன்னேற்றப் பாதையில் டுகாட்டி

நஷ்டத்தில் இயங்கி வந்த இத்தாலியை சேர்ந்த டுகாட்டி பைக் நிறுவனத்தை கடந்த 2012ம் ஆண்டு ஃபோக்ஸ்வேகன் குழுமம் கையகப்படுத்தியது. இந்த நிலையில், கடந்த 12 மாதங்களின் விற்பனை நிலவரப்படி, 5 சதவீத வளர்ச்சியை டுகாட்டி நிறுவனம் பதிவு செய்துள்ளது. இந்த புதிய மாடல் விற்பனையில் முக்கிய பங்கை வழங்கும் என டுகாட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
The Ducati Scrambler is the most beautiful bike of the 2014 EICMA motorcycle show.
Story first published: Tuesday, November 11, 2014, 13:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X