டிவிஎஸ் அப்பாச்சி 200சிசி பைக் பற்றிய புதிய தகவல்கள்!

By Saravana

பஜாஜ் ஆட்டோவின் பல்சர் வரிசைக்கு போட்டியாக புதிய பைக் மாடல்களை டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. தற்போது 160சிசி மற்றும் 180சிசி மாடல்களில் அப்பாச்சி பைக்குகள் விற்பனையாகி வரும் நிலையில், அடுத்து 200சிசி மாடலை அறிமுகம் செய்ய டிவிஎஎஸ் திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மத்தியில் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் 200சிசி அப்பாச்சி மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த டிரேக்கன் கான்செப்ட் மாடல் அடிப்படையில் இந்த புதிய மாடல் டிசைன் செய்யப்பட்டிருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில், புதிய டிவிஎஸ் அப்பாச்சி 200சிசி மாடல் பற்றி புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.


குறியீட்டுப் பெயர்

குறியீட்டுப் பெயர்

டிவிஎஸ் ஆர்டிஆர் 200 என்ற பெயரில் வர இருக்கும் புதிய அப்பாச்சி பைக் எக்ஸ்21 என்ற குறியீட்டுப் பெயரில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய அப்பாச்சி பைக்கில் 210சிசி கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 30 பிஎஸ் பவரை அளிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

புதிய டயர்

புதிய டயர்

தற்போது அப்பாச்சி பைக்கில் டிவிஎஸ் டயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், புதிய மாடலில் மிச்செலின் டயர்கள் பொருத்தப்பட்டிருக்கும். அதிக தரைப் பிடிப்பை வழங்க வல்லதாக இருக்கும்.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

புதிய மாடல் டிரேக்கன் கான்செப்ட் அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டாலும், பல்வேறு மாறுதல்கள் கொண்டதாக வர இருக்கிறது. பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டிருக்கும். ஸ்பிளிட் இருக்கைகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

 ஏபிஎஸ்

ஏபிஎஸ்

முன்புறத்திலும், பின்புறத்திலும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டிருக்கும். மேலும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர சிறப்பம்சமாக இடம்பெற்றிருக்கும்.

 விலை

விலை

ரூ.1.5 லட்சம் விலையில், புதிய அப்பாச்சி 200 பைக் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Chennai based Tvs motors is developing new apache 200 entry level sports bike. The new apache 200 will be launched by next year. It will be priced around INR. 1.5 Lakhs.
Story first published: Friday, December 26, 2014, 12:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X