இந்தியாவில் அப்ரிலியா பைக் அசெம்பிளிங் செய்ய முடிவு: விலை குறையும்!

By Saravana

இந்தியாவில் அப்ரிலியா பைக்குகளை அசெம்பிள் செய்து விற்பனை செய்ய பியாஜியோ முடிவு செய்துள்ளது. இதையடுத்து, அப்ரிலியா பைக்குகளின் விலை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை பியாஜியோ நிறுவனத்தின் தலைவர் ரவி சோப்ராவும் உறுதிப்படுத்தியிருக்கிறார். அப்ரிலியா பைக்குகள் மட்டுமின்றி மோட்டோ குஸ்ஸி பிராண்டு பைக்குகளையும் இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அப்ரிலியா மாடல்கள்

அப்ரிலியா மாடல்கள்

இந்தியாவில் அப்ரிலியா பிராண்டிலான ஆர்எஸ்வி4, டூவோனோ வி4, டார்ஸோடியூரோ மற்றும் எஸ்ஆர்வி என்ற 5 மாடல்களை பியாஜியோ நிறுவனம் இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது.

போட்டி போட முடியாத நிலை

போட்டி போட முடியாத நிலை

இறக்குமதி அதிகம் என்பதால் அப்ரிலியா பைக்குகள் ரூ.10 லட்சத்திற்கும் மேல் விலை கொண்டதாக இருக்கிறது. போட்டியாளர்களைவிட அப்ரிலியா பைக்குகளின் விலை எக்கச்சக்க கூடுதல் விலை கொண்டதாக இருக்கிறது. இதன் காரணமாக விற்பனை படு மந்தமாக இருந்து வருகிறது.

 இந்தியாவில் உற்பத்தி

இந்தியாவில் உற்பத்தி

இறக்குமதி வரியை தவிர்ப்பதற்காக முக்கிய பாகங்களை இறக்குமதி செய்து இந்தியாவிலேயே அப்ரிலியா பைக்குகளை அசெம்பிள் செய்து விற்க பியாஜியோ முடிவு செய்துள்ளது.

 விலை குறையும்

விலை குறையும்

இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யும்போது, அப்ரிலியா பிரிமியம் பைக்குகளின் விலை கணிசமாக குறையும். எனவே, போட்டியாளர்களை சமாளித்து வாடிக்கையாளர்களை கவர முடியும் என்று பியாஜியோ நம்புகிறது.

மோட்டோ குஸ்ஸி

மோட்டோ குஸ்ஸி

அப்ரிலியா தவிர்த்து மோட்டோ குஸ்ஸி பிராண்டு பைக்குகளையும் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக பியாஜியோ தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Aprilia, the Piaggio owned Italian performance bike manufacturer, currently brings its products to India via the CBU route. This means the motorcycles get charged high import duty and other additional taxes, which result in a final retail price that is 140 percent of what the motorcycles would cost if assembled locally.
Story first published: Tuesday, March 18, 2014, 8:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X